ஜல் ஜீவன்’ திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றம்! காஞ்சிபுரம் கலெக்டருக்கு கிடைத்தது ‘பிரதமர் விருது’ !

ஜல் ஜீவன்’ திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றம்! காஞ்சிபுரம் கலெக்டருக்கு கிடைத்தது ‘பிரதமர் விருது’!

ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் துவங்கப்பட்டன.

இந்த திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. பிரதமர் மோடி அவர்களும் இந்த திட்டத்தின் செயல்ப்டுகள் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சிறப்பாக செய்லபடும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் ‘பிரதமர் விருது’ காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 21ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ‘ஜல் ஜீவன்’ திட்டம் துவங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டு, மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2022 அக்., ல் இத்திட்டப்பணிகள் முடிவுற்றன. இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர்.

கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை கண்காணிக்க வேண்டும்.

‘பைப் லைன்’ பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version