ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழுதேர்தல் வேகம் எடுக்கும் பாஜக.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த விஷேச அதிகாரமான ஆர்ட்டிக்கிள் 370ரத்து செய்யப்பட்டு மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு நடைபெற இருக்கும் முதல் பொலிடிக்கல் டெவலப்மெண்ட் டிஸ்ட்ரிக்ட் டெவ லப்மெண்ட் கவுண்சில் தேர்தல் தான் வருகின்ற 28 ம் தேதியில் இருந்து டிசம்பர் 19 வரை 8 கட்டமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மாவட்ட வளர்ச்சி கவுண்சில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஜம்முவில் 10 மாவட்டங்களும் காஷ்மீரில் 10 மாவட்டங்களும் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 14 உறுப்பினர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க பட இருக்கிறார்கள்.அதற்கு பிறகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 14 கவுன்சிலர்களும் சேர்மன் மற்றும் துணை சேர்மனை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.

இந்த தேர்தலை பிஜேபி மிகப்பெரிய சவாலாக எடுத்து வேலை செய்து கொ ண்டு இருக்கிறது. ஏனென்றால் பிஜேபிஅரசு மேற்கொண்ட ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மக்களி ன் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அறிய வைக்கும் தேர்தல் இது.

இந்த தேர்தலில் அதிகப்படியான உறுப்பினர்களை பெற்று ஜம்மு காஷ்மீரை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கையில் பிஜேபி தீயாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.வழக்கம் போல இந்த தேர்தலுக்கும் ஒருபொறுப்பாளரை நியமித்து இருக்கிறதுபிஜேபி..

மத்திய இணை அமைச்சராக உள்ள அனுராக் தாகூரை இந்த தேர்தல்க்கு பொறுப்பாளராக நியமித்து அவர் தலைமையில் பிஜேபி வேலை செய்து கொண்டு இருக்கிறது.ஜம்முவில் உள்ள 10 மாவட்ட கவுண்சிலையும் பிஜேபி கைப்பற்ற வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் காஷ்மீரில் பரூக்அப்துல்லா தலைமையில் ஒன்று சேர்ந்துள்ள குப்கார் கோமாளிகளின் கூட்டணியை பிஜேபி முறியடித்து காஷ்மீரில் உ ள்ள 10 மாவட்ட கவுன்சில்களையும் கைப்பற்றுமா? என்று டிசம்பர் 22 ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.ஒவ்வொரு தேர்தலிலும் பிஜேபி எப்படி அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து செயல் படுகிறது என்பதற்கு ஜம்மு காஷ்மீரில் பிஜேபி நடத்தி வரும் தேர்தல் பிரச்சார ங்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Exit mobile version