வானதி சீனிவாசனிடம் கமலஹாசன் தோல்விக்கு பிறகு எப்படி உள்ளார் என விசாரித்த பிரதமர் மோடி! எம்.ஆர்.காந்தியிடம் 1967 கன்யாகுமாரி நினைவுகளை பகிர்ந்த மோடி!

தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களும் ஆலோசனைகளையும் பெற்றார்கள். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதி அளித்துள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.

கடந்த ஏப்ரலில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற 4 எம்.எல்.ஏ.க்களும் (நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, டாக்டர் சி.கே.சரஸ்வதி) பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். மாநிலத் தலைவர் திரு. எல்.முருகன் அவர்களும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தார்.
தமிழகத்தின் நலன், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, தமிழக அரசியல் சூழல் குறித்து விரிவாக எங்களுடன் கலந்துரையாடினார். தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார் பிரதமர் மோடி.

கொரோனா தடுப்பூசி குறித்து இப்போதுதான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்திற்கு அதிகமான தடுப்பூசிகளை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தோம். “ஆரம்ப கட்டத்தில் அதிகமான தடுப்பூசிகளை வீணடித்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதால் சூழல் அப்படி இருந்திருக்கலாம். எவ்வளவு வேகமாக தமிழகம் தடு்ப்பூசிகளை செலுத்த தயாராக இருக்கிறதோ அவ்வளவு தடுப்பூசிகளை வழங்க தயாராக இருக்கிறோம். இந்த மாதம்கூட தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு இரு மடங்கு அதிகரித்துள்ளோம். தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனித்தனியே கருத்துக்களை பகிர்ந்துள்ளார் குறிப்பாக தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர். காந்தியை பார்த்ததும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்தார்.

1967-ல் அவர் கன்னியாகுமரிக்கு வந்தபோது எம்.ஆர்.காந்தி மாவட்டத் தலைவராக இருந்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். பாசத்துடன் அவருடன் பிரதமர் கலந்துரையாடினார். தொடர்ந்து, 4 எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதிகளின் வளர்ச்சிக்கான சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்திக்க இருப்பதையும் கூறியுள்ளனர். அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமருடன் பேசும் போது, கோவை தெற்கு சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசனிடம் கமல்ஹாசனை பற்றி விசாரித்துள்ளது மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. வானதி சீனிவாசன் அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, தோல்விக்கு பிறகு கமல்ஹாசன் எப்படியிருக்கிறார் என்பதையும் விசாரித்து இருக்கிறார்.

Exit mobile version