கமல் உருவாக்கும் பிஜேபி எதிர்ப்பு கூட்டணி.

ஹைதராபாத்தில் மட்டும் கடையை விரித்து இருந்த அசாதுதீன் உவைசி மகாராஷ்டிரா பீகார் அடுத்து மேற்கு வங்காளம் தமிழகம் என்று பல மாநிலங்க ளில் கடை விரிக்க இருக்கிறார். அசாதுதீன் உவைசி போட்ட கடையினால் வியாபாரம் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்
தியது என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.

தமிழகத்தில் அசாதுதீன் உவைசி போட்டியிட நினைக்கிறார். அதனால் அவர் கமல்உடன் கூட்டணி வைக்கவும் கமல் தலைமையில் இந்த சட்டமன்ற தேர்தலில் ஒருநல்ல கூட்டணியை உருவாக்க இரு க்கிறார்.நடிகர் விஜயின் அப்பா சந்திர சேகர்அவர்களின் கட்சி மாதிரி பல பிஜேபி எதிர்ப்பு சக்திகள் கமலுடன் கை கோ ர்க்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதனால் கமல் உருவாக்கும் கூட்டணி கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளை விட
நிச்சயமாக அதிக வாக்குகளை பெறும் நிலைக்கு செல்ல முடியும்.

கடந்த லோக்சபா தேர்தலில் பல தொகுதி களில் மக்கள் நீதி மையம் 3 வது இடங்க ளில் வந்து இருந்தது.சில இடங்களில் குறிப்பாக நகர்புறங்களில் நல்ல ஓட்டுக்க ளை பெற்று இருந்தது.

கடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மையம் 3.7 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. கோயம்புத்தூர் லோக் சபா தொகுதியில் தான் மிக அதிகமாக 1.45 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று இருந்தது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 1.35 ஆயி ரம் வாக்குகளை பெற்று இருந்தது.

தென் சென்னை தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரம் வாக்குகளை பெற்று இருந்த து.வட சென்னையில் 1 லட்சத்து 3 ஆயிர ம் வாக்குகளை பெற்று இருந்தது.மத்திய சென்னையில் 93 ஆயிரம் ஓட்டுக்களை
பெற்று இருந்தது. மதுரையில் 85 ஆயிர ம் திருச்சி 42 ஆயிரம் என்று ஓரளவு வாக்குகளை பெற்று இருந்தாலும் அதனால்
திமுகவின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் லோக்சபா தேர்தல் மாதிரி இ ல்லாமல் வருகின்ற சட்டமன்ற தேர்த லில் நிச்சயமாக திமுகவின் வெற்றி தோல்வி களை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் நீதி மையம் பல தொகுதிகளில் இருக்கு ம்.

ஏனென்றால் லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதிக்கு குறைந்தது 10 லட்சம் ஓட்டுக்களுக்கு அதிகமாக இருக்கும்.இதனால் கமல் மாதிரி மூன்றாவதாகஅணியாக களத்தில் நிற்கும் வேட்பாளர்ள் 50 ஆயிரம் 1 லட்சம்வாக்குகளை பெ ற்று இரு ந்தாலும் அதனால் வெற்றி பெறும் கட்சி யின் வாக்கு வித்தியாசம்குறையுமே தவிர வெற்றி பாதிக்கப்படாது.

ஏனென்றால் ஒரு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிக ளில் ஒவ்வொன்றிலும் கமல் கட்சி சுமார் 20 ஆயிரம் 30 ஆயிரம் வாக்குகளை பெ ற்று இருக்கும். ஏனைய4 தொகுதிகளில் மொத்தமாகவே 10 ஆயிரம் ஓட்டுக்களை தான் பெற்று இருக்கும்.

இதனால் கமல் கட்சி ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று இருந்தாலும் அதனால் திமுக கூட்டணிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட வில்லை.

ஆனால் சட்டமன்ற தேர்தல் கணக்கு வேறு. சட்டமன்ற தொகுதியில் அதிகப ட்சமாக 2 லட்சம் வாக்குகள் தான். இதில் கமல் கட்சி தனக்கு செல்வாக்கான தொகுதிகளில் 10 ஆயிரம் 20 ஆயிரம் வாக்குகளைப்பெற்றாலே போதும். திமுகவின் வெற்றி அதோ கதி தான்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவுக்கும் தோல்வி அடைந்த அதிமுகவுக்கும் இடையே இருந்த வாக்கு வித்தியாசம் வெறும்1 சதவீதம் தான்.ஆனால் அந்த 1 சதவீத வாக்கு வித்தியா சத்தில் திமுகவை விட அதிமுக 38 தொகுதிகளில் அதிகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட்டது.

எனவே கமல் உருவாக்கும் 3 வது அணி என்பது திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளை பிரித்து பல தொகுதிகளில் ஆளும் கட்சி வேட்பாளகள் வெல்லும் நிலையை வருகின்ற சட்டமன்ற தேர்தலி ல் உருவாக்கும்.

கமல் மட்டுமல்லாமல் சீமான் கூட சில இடங்களில் திமுகவின்வெற்றியை காலி செய்வார்.ஆளும் கட்சிக்கு எதிராக மிகப்
பெரிய அதிருப்தி அலை வீசினாலும் அதை 3 வது 4 வது அணி வேட்பாளர்கள் சிதைத்து ஆளும் கட்சியை ஜெயிக்க வைத்தார்கள் என்று வருகின்ற 10 ம் தேதி பீகார் தேர்தல் முடிவுகள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

கடந்த லோக் சபா தேர்தல் மாதிரி தமிழக த்தில் அவ்வளவு சுலபமாக திமுக ஜெயி த்து விட முடியாது.ஜெயிக்க விட மாட்டோ ம் என்னப்பா சசிகலா தலைமையில் மூ ன்றாவது அணி என்னாச்சு? என்கிறீர்க ளா? சசிகலா சிறையில் இருந்து வந்த வுடன் அவர் தலைமையில்ஒரு கூட்டணி உருவாகும் ஆக மொத்தம்4 முனைப் போட்டி தமிழகத்தில் உறுதி.

கமல் தலைமையில் உருவாகும் அணி நகர்ப்புறங்களில் திமுகவின் வெற்றி யை சிதைத்து ஆளும் கட்சிக்கு சாதக மான நிலையை உருவாக்கும். சசிகலா தலைமையில் உருவாகும் அணி கிராம புறங்களில் திமுகவின் வெற்றிக்கு கேட்போடும்.

ஆமாப்பா ஆளும் கட்சி ஆளும் கட்சி என்கிறாயே அது எதுப்பா? எடப்பாடி தானே என்று நீங்கள் கேட்கலாம். இப்போது வேண்டுமானால் எடப்பாடி ஆளும் கட்சியாக இருக்கலாம். ஆனால் தேர்தல் நடை
பெறும் பொழுது பிஜேபி தான் ஆளும்கட்சி .அதோடு அடுத்து தமிழகத்தை ஆள இருக்கும் கட்சி.

கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version