அநாயாசேன மரணம்
விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபையா சம்போ
த்வயி பாத பக்திம் அசஞ்சலாம்
அர்த்தம் :
உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனாய எனக்கு சர்வசாதாரணமான , வறுமை, கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா.
பூர்வஜென்ம கர்மாவை ஒட்டி… இன்றைய பிறவியில்….
அனாயசமான மரணமும், அடுத்தவரிடம் அண்டிப் பிழைக்காத ஜீவனமும் உண்டாகும். இப்போது அதை உணர்ந்து… ஒழுங்காய், ஒழுக்கமாய் வாழ்ந்தால் வேண்டாமலே கிட்டும்.!!
இருந்தாலும், கலியுக தர்மத்தை ஒட்டி.. பெரியோர் எழுதிவிட்டுச் சென்ற ப்ரார்த்தனைகள் இவை.
அனாயாஸேன #மரணம்
சிரமப் படுத்தாத சாவு, அதாவது இறக்கும் போது பூர்ண ப்ரக்ஞையுடன் அனாயசமாக உடலை விட்டு வெளியேறுவதே சிறந்ததோர் மரணம்.
…..#வினாதைன்யேன #ஜீவனம்;
பிறரை அண்டிப் பிழைக்காத வாழ்வு, யாரிடமும் கையேந்தி பிழைக்காத நிலைமை.
தேஹிமே #க்ருபயா #ஶம்போ; எனக்கு இவைகளை கொடு ஆனால்
இவைகளை கொடுத்த நீ என்றும்
…..#த்வயிபாத #பக்திம் #அசஞ்சலாம்.
உன் மீது அசைக்க முடியாத பக்தியையும்
ஈசனே, அருள் கூர்ந்து எனக்குத் தந்தருள்வீராக!
தினமும் தாராளமாய் வேண்டலாம்.
ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர !