கர்நாடகாவில் முதல்வர் சீதாராமய தலைவரான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு ராஜ சபா எம்பி தேர்தல் நடைபெற்றது .இதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சையத் நாசிர் உசேன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் உசேனின் ஆதரவாளர்கள் விதன் சவுதாவில் அவருக்கு மாலை அணிவித்து கொண்டாடினர், உசேன் பேட்டி அளித்துக் கொண்டிருந்த பொழுது அவரது பின்னால் நின்றிருந்த ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று இரண்டு முறை கோஷம் எழுப்பினார்.
இந்த வீடியோ டிவி வலைதளங்களிலும் வேகமாக பரவியது இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் விதான் சவுதா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இந்நிலையில் நேற்று பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
நிலையில் பெங்களூரில் உள்ள பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் தேசியக் கொடியை ஏந்தி வந்தனர். சட்டசபை துவங்கியதும் எழுந்து பாரத் மாதா கி ஜே ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் அசோக் வலியுறுத்தி பேசினார் இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கவே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சட்டசபையில் கடும் அமளி நிலவியது சபாநாயகர் இருக்கை முன்பு பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் நேற்று முழுவதும் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு இன்று சட்டசபை கூடும் என சபாநாயகர் காதல் அறிவித்தார்