# Breaking : கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா! கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? பரபரக்கும் கர்நாடக அரசியல்!

கர்நாடகாவில் 4 முறை முதல்வராக இருந்த எடியூரப்பா இன்று முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி எடியூரப்பா 4வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜ.கவில் ஓய்வு அளிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.

ஆனால் கர்நாடக முதல்வராக 4 வது முறையாக எடியூரப்பா பதவி ஏற்கும் போது அவருக்கு வயது 76 இருந்தாலும் பாஜக அவருக்கு விலக்கு அளித்தது. அவருக்கு முதல்வர் பதவியை பா.ஜ.க மேலிடம் வழங்கியது. ‘அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்ற எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று இன்றுடன் (ஜூலை 26) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதன் காரணமாக எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு சாதனையை கொண்டாடும் விதமாக,பெங்களூருவில் கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொண்ட எடியூரப்பாபேசுகையில் , ‘என்னை 7 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. நான் கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்றுக் கொள்வேன். கட்சி மேலிடத்தின் முடிவை மீற மாட்டேன். எனக்கு எந்த குறையும் இல்லை. எனக்கு ஆதரவாக மடாதிபதிகள் மாநாடு நடத்துவது அவசியமற்றது. இன்று பிற்பகலில் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன்’ எனக் கண்ணீர் மல்கப் பேசினார்.

எடியூரப்பாவுக்கு அடுத்து முதல்வர் யார் என்று கர்நாடக மீடியாக்கள் விவாத ம் நடத்தி வருகின்றன. இதில் முன்னணி யில் இருப்பவர்கள் இருவர்.முதலில் இருப்பவர் பிரகலாத் ஜோஷி இரண்டாவது இடத்தில் இருப்பவர் சி.டி.ரவி.இந்த போட்டோவில் கூட எடியூரப்பா வுக்கு அடுத்து இருப்பவர் பிரகலாத் ஜோஷி அடுத்து இருப்பவர் சி.டி ரவி பிரகலாத் ஜோஷி முன்னாள் கர்நாடகமாநில பிஜேபி தலைவராக இருந்தவர் இப்பொழுது மத்திய அமைச்சராக இருக்கிறார்.

பாராளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சராக 2019 ல் இருந்து பணியாற்றி வருகிறார் மோடியின் நம்பிக்கையை பெற்ற அமைச்சர்களில் பிரகலாத் ஜோஷியும் ஒருவர் தார்வாட் லோக்சபா தொகுதியில் தொடர்ந்து 2004 ல் இருந்து 2019 வரை 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். லிங்காயத்துக்கள் அதிகம் உள்ள வடக்கு கர்நாடகாவில் பிரகலாத் ஜோஷி தொடர்ந்து மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்று வருகிறார்.

Exit mobile version