கார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன

கார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது.

அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் பாவங்களையும் அழித்துவிடும் என்று கருதப்படுவதால் இந்து மதச் சடங்குகளில் கார்த்திகை ஸ்நானம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. தினமும் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் எல்லா துன்பங்களும் விலகும்.

கார்த்திகை மாதம் தீபம் தானம் செய்வது லட்சுமிகடாட்சம் தரும்.வெண்கலப்பாத்திரம், தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் செல்வம் சேரும். கார்த்திகை புராணத்தைக் கேட்டால் நோய், ஏழ்மை அகலும். கார்த்திகை மாதத்தில் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும். ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும். பௌர்ணமிக்குப் பிறகு வரும் சோம வாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். முற்றத்தில் 4, பின்கட்டில் 4, கோலமிட்ட வாசலில் 5, திண்ணையில் 4, வாசல் நடை, மாடக்குழி, நிலைப்படி, சுவாமி படம் அருகில் தலா 2 விளக்குகள், சமையல் அறையில் 1 மற்றும் வெளியே எம தீபம் 1 என்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும். வீட்டுவாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

தீபம் ஏற்றும் முறைகள்:


தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும்.ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் மறுபடியும் ஏற்றக்கூடாது.அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

விநாயகப்பெருமானுக்கு ஏழு தீபம்,
முருகருக்கு 6 தீபம்,
பெருமாளிற்கு 5 ,நாக அம்மனுக்கு 4 தீபம்,சிவனிற்கு 3 /9 தீபம்,
அம்மனுக்கு 2 தீபம், மஹா லஷ்மிக்கு 8 தீபம், ஏற்றி வழிபட வேண்டும்.

தீபங்கள் வாகனங்களுக்கு முன்பாக ஏற்றவேண்டும். சிவன் கோயிலில் நந்திக்கு முன்பாகவும்,
அம்மன் – சிங்கம்/ நந்தி முன்பாக,
பிள்ளையார் – பெருச்சாளி முன்பாக,
பெருமாள் – கருடன் முன்பாக,
முருகர் – மயில் முன்பாக ஏற்ற வேண்டும். துர்க்கை அம்மனுக்கு மட்டும் எலுமிச்சை பழ விளக்கு 2 ஏற்ற வேண்டும்.

தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும்,குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும் குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.


திசைகளும் தீபங்களும் நாம் அன்றாடம் காலையும் மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும் ?

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன்
மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.

சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

திரியில்லாமல் தீபம் ஏது? திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா?

சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.

தம்பதிகள் மனமொத்து வாழவும் மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரியும்?

எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்? நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே?

ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று.

கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம்.

எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.

செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை,இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்துவிளக்கேற்ற வேண்டும்.

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும்,பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

Exit mobile version