ஆர்.எஸ்.பாரதி எப்போதும் வாய்க்கு வந்ததை பேசுபவர். அதுபோல் ன் சில ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என பேசினார் மீடியாக்கள் எல்லாம் ரெட் லைட் ஏரியா மீடியாக்கள் என விமர்ச்சித்தார். இது போதாது என்று கேப்டன் விஜயகாந்த் மீது வன்மத்தை கக்கியுள்ளார். ஆர்.எஸ். பாரதி.
பொதுமக்களுக்கு அல்வா வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் டாஸ்மாக் போய்விடுவார்கள் என ஓப்பனாக பேசிய ஆர்.எஸ்.பாரதி திமுக தலைவர் கருணாநிதி இறந்த பின் முன்னாள் முதல்வர் அண்ணா அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கலைஞரை அடக்கம் செய்ய ஆறடி இடம் கொடுக்காமல் எடப்பாடி மறுத்தார்.
அப்படிப்பட்ட கல் நெஞ்சம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி, ஆனால் யாரும் கேட்காமலே விஜயகாந்துக்கு அரசு மரியாதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்திற்கு கலைஞர் அழைப்பு விடுத்தார். தனியாக நிற்காமல் எங்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் கலைஞர் கண்டிப்பாக முதல்வராக இருந்திருப்பார்.
கலைஞர் முதலமைச்சராக இருந்திருப்பார் முதலமைச்சராகிய தைரியத்துடன் கூட கலைஞர் உயிரோடு இருந்திருப்பார். கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ஜெயலலிதா இறந்திருக்க மாட்டார். உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து தற்போது வரை இருந்திருப்பார் விஜயகாந்த் செய்த துரோகத்தின் காரணமாகத்தான் கலைஞர் உயிரிழந்தார். கலைஞர் இறக்கும்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இறக்க காரணம் விஜயகாந்த் தான் என விமர்சித்தார்.
திமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்ற காரணத்திற்காக தான் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை வழங்கியது திமுக. மேலும் விஜயகாந்த் பபிறப்பினால் தேமுதிக மீது அனுதாப அலை வீச துவங்கி உள்ளது. இந்த நிலையில் திமுகவுடன் கூட்டணி இல்லை என சொல்லாமல் சொல்லிவிட்டது தேமுதிக. இதை பொறுத்து கொள்ளமுடியாமல் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வன்மத்தை கக்கியுள்ளார். இது தேமுதிக தொண்டர்கள் மட்டுமின்றி விஜயகாந்த் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது