காவிரி நீரை தரயா இல்லா கூட்டணியை கலைக்கட்டுமா, ஸ்டாலின் சத்யராஜை பங்கம் செய்த கஸ்தூரி…

சில நாட்களுக்கு முன்னர் காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஸ்டாலின் சத்யராஜை வெளுத்து வாங்கிவிட்டார் .
“திமுக – காங்கிரஸ் கூட்டாளிகளாக இருப்பதால் காவிரி பிரச்சினையை அவர்கள் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை கிடையாது.. காவிரி நீர் கடல் வரை சென்று கலக்க வேண்டும்.. ஜீவநதி என்ற பெயரே, அப்போதுதான் அந்த நதிக்கு பொருந்தும்.. ஆனால், அங்கங்கே, அணைகளை கட்டினால் அந்த நதி, குளம், குட்டையாகி கடைசியில் சாக்கடையாகத்தான் மாறும்.

காவிரி சொந்தம்: கர்நாடகாவில் உள்ள பாஜக உள்பட அங்குள்ள அனைத்து கட்சிகளும், நமக்குதான் காவிரி சொந்தம் என்று அங்குள்ள மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.. கிருஷ்ணசாகர் அணையை கட்டிய விஸ்வரேஸரய்யர்தான், காவிரியை தோண்டி எடுத்தார் என்று இன்னமும் நம்புகிறார்கள்.. அங்கு படித்தவர்கள்கூட இதைத்தான் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் சூழ்நிலையில், வாக்கு அறுவடைக்காக செயல்படும் கர்நாடகா அரசியல்வாதிகளுக்கு நாம் கண்டனத்தை தெரிவித்து வருகிறோம்.

ஆனால், இண்டியா கூட்டணியிலுள்ள தமிழக முதல்வர், தண்ணீர் தருகிறாயா? இல்லை, கூட்டணியை கலைக்கட்டுமா? என்று ஒரே ஒரு கேள்வியை கேட்காமல், திரைமறைவாகச் செயல்படுவோம் என்று சொல்லி வருகிறார்.. அதனால்தான், காவிரி நீர் பிரச்சினைக்கு எல்லாருமே சேர்ந்து போராட வேண்டும்.

சத்யராஜ் எங்கே: தமிழக திரைத்துறையில் இன்று சில விநியோகஸ்தர்கள், வியாபாரிகளை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, காவிரி பிரச்சினையில் ஈடுபடாமல் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. காவிரிக்காக குரல் கொடுத்த நடிகர் சத்யராஜ் போன்றவர்கள், தமிழக முதல்வருக்கு, போனில் தொடர்பு கொண்டாலே, சுலபமாக காவிரி பிரச்சனையை முடித்து விடலாம்.. ஆனால், அவர்கள் ஏன் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும்.. இருந்தாலும், தெரியவில்லை என்று தான் நான் சொல்ல முடியும்.

காவிரி தமிழகத்தின் உரிமை. அதை கேட்பதற்கு திமுக அரசுக்கு என்ன தயக்கம்? கூட்டாளி கட்சிதானே காங்கிரஸ்? தமிழனுக்கு தண்ணி தராத காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தமிழ்நாட்டில் MP தேர்தலில் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் நிராகரியுங்கள்.

Exit mobile version