தமிழகத்தை இரண்டாக கொங்குநாடு உருவாகுமா வானதி சீனிவாசன் பதில்.

தமிழகத்தை இரண்டாக கொங்குநாடு உருவாகுமா வானதி சீனிவாசன் பதில்.

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு உருவாக வேண்டும் என சமூக வலைதளப் பக்கத்தில் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் கொங்குதேர் வாழ்க்கை என்ற சங்கப் பாடலை குறித்து பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவு:-

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சறை தும்பி பாடலில் ஈசன் குறிப்பிட்டது தேனுக்கு நிகராக கொங்கு என்ற பதத்தை உபயோகித்து இருப்பார். குறிஞ்சி , முல்லை, மருத நிலங்களில் எல்லாமே தேனிக்களும் தேன் கூடும் நிறைந்த சமூக வாழ்வியலை சொல்லும் பல்வேறு சங்க சித்திரங்கள் இருக்கிறது.

தேன் நிறைந்த குறிஞ்சி , முல்லை நிலங்கள் நிறைந்த பகுதி என்பதாலேயே கொங்கு நாடு என்று சங்கப்புலவர்கள் சொல்லி இருக்கிறார்கள். கொங்கு ஏழு சிவத்தலங்கள் , கொங்கு மண்டல சதகங்கள், கொங்கு எல்லைகள் பற்றிய தனிப்பாடல்கள், சிலப்பதிகாரம் , தண்டியலங்காரம் என்று பல்வேறு சான்றுகளை சொல்லலாம். சேர , சோழ, பாண்டிய, கொங்கு , தொண்டை நாடு உள்ளிட்டவைகளையே 5 பகுதிகளாக சங்கப்புலவர்கள் பாடி இருக்கிறார்கள்.

அசோகரின் பிராமி கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் சத்புத்திரர்கள் கொங்கு பகுதியில் ஆட்சி செய்தது அனைவரும் அறிந்ததே. வேளிர்கள், ஆயி மன்னர்கள் ஆட்சியின் கீழ் கொங்கு பிரதேசம் இருந்ததற்கான ஆதாரங்களை பல வரலாற்று அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் வரலாற்றில் அதிக காலம் ஆட்சியில் இருந்தவர்கள் கொங்கு பகுதியில் இருந்த கொங்கு சோழர்கள் தான் என்பதை வரலாற்று ஆய்வுகளும் கல்வெட்டுக்களும் சொல்லும் செய்தியில் இருந்து அறியலாம்.

இது பற்றி எல்லாம் புலவர் இராசு, புலவர் தொல்சிகாமணி கவுண்டர் முதலிய பல ஆய்வறிஞர்கள் எழுதி இருக்கிறார்கள் . Political geography of kongu country எனும் வைத்தியநாதன் அவர்களின் நூலில் மிக விரிவாக சங்க காலத்தில் இருந்து நாயக்கர் காலம் வரை கொங்கு பகுதியின் சுயாட்சி, போர்கள், நிலவியல், ஆபரணங்கள் , எல்லை பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதி இருக்கிறார்.

அதையும் படித்து பார்த்து விட்டு கருத்து சொல்லலாம். கொங்கு நாடு எனும் coinage மிகவும் தொன்மையானது.


என்று புறநானூற்றில் செல்லப்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version