கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கூடாது ட்ரெண்டிங்கில் #கோவை_மன்னிக்காது

கடந்த 1998 பிப்.,14 அன்று, கோவை நகரில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம், இன்று நடைபெற்றது. இதில், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி, செல்வப்பெருந்தகை, சிந்தனைச்செல்வன் உட்பட பலர் கோரிக்கை வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 20 இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட மொத்தமாக 49 ஆயுள்தண்டனை சிறைவாசிகளின் பெயர்கள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஒப்புதல் கிடைத்ததும் விடுதலை செய்யப்படுவார்கள்‌ என்றும் கூறியிருந்தார்.

இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தீவிரவாதிகளை எப்படி விடுதலை செய்யலாம் எல்லாம் ஓட்டிற்காக தான என்ற விமர்சனங்கள் தொடங்கியது. மேலும் சமூக வலை தளங்களில் கோவை மன்னிக்காது என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.மேலும் அவர் கூறுகையில் கோவை குண்டுவெடிப்பை தீவிரவாத செயலாகவே பார்க்கிறேன்.தீவிரவாதிகளை வெளியில் விடக் கூடாது. தமிழகத்தில் தீவிரவாதம் இன்னும் அப்படியே இருக்கிறது. மாநில அரசு அதைக் கட்டுப்படுத்தவில்லை. அதற்கான திறனும் இல்லை. என பேட்டியளித்தார்.

Exit mobile version