சட்டசபையில் நிதி அமைச்சர் பிடி தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்.

தமிழக சட்டசபையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக தனது பேச்சினை துவங்கிய பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்.

தமிழக சட்டப்பேரவை பொது நிலை அறிக்கை கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது அதில் முதல் முறையாக காகிதம் இல்லாத நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.

தமிழக சட்டசபையில் தனது முதல் பேச்சை துவங்கிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ தமிழகத்தில் வனவிலங்குகளால் பயிர் சேதமடைகிறது மனித உயிர்கள் பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது இதற்கு பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டமும் கொண்டுவரப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பினார் .

இதற்கு தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பயிர்களைப் பாதுகாப்பதில் வனவிலங்குகள் ஆனால் யானைகள் எருமைகள் பிரச்சினைகள் இருக்கிறது நிச்சயம் அதற்கான திட்டத்தை தமிழக அரசு வகுக்கும் என கூறினார் .

பின்பு வன விலங்குகள் பற்றி கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் வனவிலங்குகளால் பயிர் சேதம் அடைவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வன விலங்குகள் வசிக்கும் பகுதியில் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அவர்களை அப்புறப்படுத்த பணியும் உடனே நடைபெறும் என தெரிவித்தார்.

அதன்பின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய வானதி சீனிவாசன் மத்திய அரசு என்பதற்கு பதிலாக சமீபகாலமாக ஒன்றிய அரசு என்று அழைப்பதை பார்க்கிறோம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண் கவி ஒருவர் எழுதிய கவிதையில் ROSE IS A ROSE IS A ROSE என்ற வரிகள் இருக்கும் அதேபோல எப்படி அழைத்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிக்கவும் முடியாது குறைக்கும் முடியாது என தனது பேச்சில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறி வரும் திமுக அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக இதை சட்டசபையிலேயே வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version