ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தோர் பற்றிய ஆற்றிய சாதனையின் சிறப்புத் தகவல்கள்.!

நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம்…

இந்த விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் இதற்கு முன் 2015ஆம் ஆண்டு லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தபோது அவர் நாகலாந்தின் திமாப்பூரில் அவர் சென்ற சீட்டா வகை ஹெலிகாப்டர் புறப்பட்ட சற்று நேரத்தில் எஞ்சின் கோளாறால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரும், விமானிகள் இருவரும், கர்னல் ஒருவரும் உயிர்தப்பியது குறிப்பிடத் தக்கது.

திருச்சூர் மாவட்டம் புதூரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி பிரதீப் கேரள, உத்தரக்கண்ட் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பின்போது மீட்புப் பணியாற்றியதற்காகக் கேரள அரசிடமும் குடியரசுத் தலைவரிடமும் பாராட்டுப் பெற்றவர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையிலும் பங்குபெற்றவர்.ஆறு மாதங்களுக்கு முன் சூலூருக்குப் பணியிட மாற்றம் பெற்று வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தையைப் பார்க்கச் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன் தனது மகனின் பிறந்த நாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பிய நான்கே நாட்களில் அவர் விபத்தில் உயிரிழந்தார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெறும் அவர் தந்தைக்கு இந்தத் தகவலை இன்னும் தெரிவிக்கவில்லை.


விபத்தில் உயிர்தப்பிய விமானியும் கேப்டனுமான வருண் சிங் சிறந்த பணிக்காகச் சவுரிய சக்கர விருது பெற்றவர். உடலில் 85 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விங் கமாண்டராக இருந்த அவர் அண்மையில்தான் குரூப் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்றார்.

ஹெலிகாப்டரின் விமானியான விங் கமாண்டர் பிஎஸ் சவுகான் உத்தரப்பிரதேசம் ஆக்ராவைச் சேர்ந்தவர். செவ்வாய் இரவில் அவர் தாயுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். மறுநாள் ஹெலிகாப்டர் விபத்தில் மகன் இறந்த செய்தியை அறிந்த பெற்றோர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தனர். சவுகானுக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

பிபின் ராவத்தின் பாதுகாப்பு அதிகாரியாக ஓராண்டாகப் பணியாற்றி வந்த பிரிகேடியர் லக்வீந்தர் சிங்கும் இந்த விபத்தில் உயிரிழந்தார். அரியானாவின் பஞ்ச்குலாவைச் சேர்ந்த இவர் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற இருந்தார். பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் வல்லவர் எனக் கருதப்படும் இவர் சேனா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர்.ராஜஸ்தானின் ஜுன்ஜுனு என்னும் நகரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி குல்தீப் சிங்கும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவர் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Exit mobile version