மதம் மாற்றதான் செய்வோம்.. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, சர்ச்சை பேச்சு .. திராவிட மாடல் நடவடிக்கை எடுக்குமா?

George Ponniah

George Ponniah

பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை மோசமாகப் பேசியதோடு, பிற மதத்தினர் குறித்து வெறுப்பை விளைவிக்கும் கருத்துக்களையும் பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

சிறுபான்மையினரின் உரிமை மீட்பு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவப் பேரவையைச் சேர்ந்த ஜார்ஜ் பொன்னையா கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்திருப்பதாகவும், அது தொடர்ந்து மேலும் அதிகரிக்குமென்றும் பேசினார். அங்கிருந்த அதிகாரிகளையும் சுட்டிக்காட்டி அவதூறாகப் பேசினார்

இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அதில் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது நாங்கள் மதம் மாற்றுவதாக, ஆர்.எஸ்.எஸ்.,காரன் சொல்றான். நாங்கள் மதம் மாற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். எங்கள் கோவில் ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்கள். எவ்வளவு பேர், ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறி உள்ளனர் என்பது தெரியும். அதற்கான பட்டியலை நாங்கள் தருகிறோம்.

நல்ல மதம் எதுவோ, அந்த மதத்தை தேடி சென்று, தன்னை மாற்றிக் கொள்கிறான். மத மாற்றமும் ஒரு வியாபாரம் தான். சந்தைக்கு சென்று மாங்காய் வாங்கப் போனால், ஒருவன் இந்த மாங்காய் நல்லது என்கிறான்; இன்னொருத்தன் இந்த மாங்காய் தான் நல்லது என்கிறான். எந்த மாங்காய் நல்லதோ, அந்த மாங்காயை தேடி வாங்குகின்றனர். அதேபோலத்தான் மத மாற்றமும்.

எங்க மதத்துக்கு வாங்க; நல்லா படிக்கலாம்; பட்டதாரி ஆகலாம்; சபாநாயகர் ஆகலாம். ஏன், அப்பாவு கிறிஸ்துவராக இருந்ததாலேயே, அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோவிலில் மணி அடித்துக்கொண்டு தான் இருந்திருப்பார். இவ்வாறு அந்தப் பதிவில் உள்ளது.

சில நாட்களுக்கு முன் சென்னை அரசு அப்பள்ளியில் மகாவிஷ்ணு என்ற சொற்பொழிவாளர் ஆன்மீகம் பற்றியும்மறு ஜென்மம் குறித்து பேசினார் என்பதற்காக மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே சர்ச்சை பேசி ஜாமினில் இருக்கும் பாதிரியார்ஜார்ஜ் பொன்னையா மீண்டும் இந்து மதம் குறித்து பேசியது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது

மகாவிஷ்ணுவுக்கு பொங்கிய அனைவரும் ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக பொங்குவார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து மதம் குறித்த சர்ச்சைகள் தமிழகத்தில் நிலவி வருவதற்கு என்ன காரணம் என்ற கேள்விகளை பொதுமக்கள் முன் வைத்துள்ளார்கள் வேறு எதையேனும் மறைப்பதற்காக மதம் குறித்த சர்ச்சைகள் உருவாக்கப்படுகிறதா என்ற கோணத்திலும் விசாரிக்க இந்து ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் திராவிட மாடல் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version