லாக் டவுன் ஆகுமா சென்னை,ஈரோடு,காஞ்சிபுரம்,கோவை ! முதல்வர் ஆலோசனை !

சீனாவில் தொடங்கிய கொரோனோ எனும் கொடிய தொற்று நோய், இன்று உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஆனால் தற்போது அதுவும் எங்கிருந்து ஆரம்பித்ததோ, அந்நாட்டில் கொரோனோ வைரஸின் அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது எனத் தெரிகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அதன் தாக்கம் இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாடுகளில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான கொரானா வைரஸின் தாக்கம் பதிவாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இத்தாலியில் 651 புதிய இறப்புகள் நடந்துள்ளது. மொத்தம் 5,476 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை சீனாவைத் விட அதிகம் ஆகும். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா 8 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நாட்டில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட மொத்தம் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மார்ச் 31 ஆம் தேதி வரை, இந்த உத்தரவை நீடிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் உத்தரவை குறித்து முடிவெடுக்க, சென்னை தலைமை செயலகத்தில் மூத்த மற்றும் முக்கிய அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு உள்ளார். இதில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 9 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version