மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வாரம் சாதிய வன்முறைக்கு முக்கிய காரணமாக கூறப்படும் எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியவர்கள் மீதான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மத்திய அரசு மாற்றிக்கொண்டது.
இந்த மாற்றத்திற்கு முதலில் சிவசேனா தலைமையிலான கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தநிலையில், சிவசேனா திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட மாநில அரசு அந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தது.
அதே போல் இந்தவாரம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மத்திய அரசு கொண்டுவந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டம்குறித்து தெரிவித்தள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்து ஆகும்.
இதில் எங்கள் கூட்டணிக்கு உடன்பாடு இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது தேசியவாத காங்கிரஸ் எதிர்த்து வாக்களித்தது.
இந்தநிலையில், மாநில அரசின் இந்த முடிவுக்கு கூட்டணி கட்சி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
மராட்டியத்தில் மகா விகாஸ் கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் முடிவை கூட்டணி கட்சி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சித்து இருப்பது மும்பை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.