மெஹபூபா முப்திக்கு மூன்று மாதங்களுக்கு காவல் நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி!

காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மத்திய மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள். ஜம்மு காஷ்மீர்க்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு புதிய பாதையில் மிகவும் உற்சாகத்துடன் நடைபோடுகிறது காஷ்மீர். எப்போது துப்பாக்கி சத்தம் நடுவே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு தற்போது சினிமா பாடல்கள் கேட்க போகின்றது. மேலும் பாலங்கள் சாலை வசதி மின்வசதி என பல்வேறு அத்தியாவசிய பணிகள் ஜம்மு காஸ்மீரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, ஸ்ரீநகரில் மூன்று மாடி மல்டிபிளெக்ஸ் மால் கொண்டு வரவுள்ளதால், காஷ்மீர்-ல் உள்ள மக்கள் விரைவில் படங்களை பெரிய திரையில் காண முடியும். இது மார்ச் 2021 க்குள் தொடங்கப்பட உள்ளது. கடந்த 1990 களில் பயங்கரவாத குழுக்கள் வழங்கிய கட்டளைகளின் காரணமாக காஷ்மீர்-ல் உள்ள பெரும்பாலான சினிமா அரங்குகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் அம்மாநில அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சிறையின் காலம் ஓராண்டு காலம் கடந்த பின்னர் தற்போது மீண்டும் மூன்று மாதங்களுக்கு அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கும், மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததற்கு தேசத்திற்கு எதிரான போராட்டங்களை அறிவித்தார் அவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் அவரது தந்தை பாரூக் அப்துல்லா ஆகியோர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டனர்

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்து, அப்பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அப்போது இந்தியாவிற்கு எதிராக கைது கோஷங்களை எழுப்பிவர்களை எம்.எஸ். முப்தி, ஒமர் அப்துல்லா, ஃபாரூக் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு மார்ச்இறுதி வாரத்தில் வீட்டு காவலில் இருந்த உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது மக்கள் மாநாட்டுத் தலைவர் சஜாத் லோன் ஒரு வருட காலத்திற்கு 5 நாட்களுக்கு முன்னதாக இன்று விடுதலை செய்யப்பட்டார். என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

Exit mobile version