களத்தில் இறங்கிய மாரிதாஸ்! நடிகர் சிவகுமார் உறவினர் SR பிரபுவால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு!

இந்தியாவில் சமூகவலைதளைங்கள் தொடங்கி தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைப்படம் வரை சட்ட திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. வெளி நாடுகளில் இருந்து பணம் வாங்கி கொண்டு இந்தியாவை பற்றியும் அரசாங்கத்தை பற்றியும் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வந்தார்கள். சேனல்கள், திரைத்துறையினர் இதனால் சாதி மத கலவரம் தூண்டும் வகையிலும் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்து வந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது

திரைப்பட ஒளிப்பதிவு வரைவு திருத்த வரைபட சட்டத்தில் Cinematography bill 2021 முக்கியஅம்சம் section 6AA என்ற ஷரத்து சேர்க்க பட்டுள்ளது…இது சினிமா திருட்டுக்கெதிரான தண்டனை பற்றி சொல்கிறது…இதுவரை சினிமா திருட்டுக்கெதிராக இந்த சட்டத்தில் தண்டனை ஏதும் இல்லை ..ஆனால் இந்த வரைவு சட்டத்தில் cinema piracy க்கு அபராதமும் சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது .

வருடம்தோறும் திரைப்பட திருட்டினால் சுமார் 20 ,000 கோடி ரூபாய் இழப்பும் சுமார் 60 ,000 நபர்கள் வேலை இழப்பதுமாக உள்ள இந்த துறையை காக்கும் பொருட்டு இந்த சட்டதில் மாற்றம் கொண்டுவர அரசு முனைந்துள்ளது … எந்த வகையிலும், எந்த இடத்தில் இருந்தும், படத்தின் இயக்குனரது எழுத்துபூர்வமான அனுமதியின்றி, படத்தின் ஒரு சில பகுதிகளோ, முழு படமோ, ஒலி – ஒளிப்பதிவு செய்யப்படக் கூடாது. அப்படி செய்யப்பட்டால், மூன்று மாதம் முதல், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. மேலும் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல், மொத்த தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரை அபராதம் உண்டு.

இந்த நிலையில் தற்போது கைதி திரைப்படம் முன்பு கொம்பன் படக் கதை திருட்டு சார்ந்து குற்றம்சாட்டப்பட்ட தயாரிப்பாளர் (நடிகர் சிவக்குமார் உறவினர்) SR பிரபு அவர்களால் கதை கேட்டு ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் இருப்பீர்கள் என்றால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். தயக்கம் வேண்டாம் உண்மை என்றால் உரிய நீதி கிடைக்கும்.விவரம் அனுப்ப வேண்டிய Email முகவரி : imsi.maridhas@gmail.com

கதை திருட்டிற்கு உடந்தையாக இருந்த அனைத்து நடிகர்களும் சிறைக்கு அனுப்ப அல்லது குறைந்தபட்ச தண்டனையாவது வாங்கி கொடுக்க தேவையான முயற்சி எடுக்கப்படும். அரசியல் கட்சிகளின் ஆசியோடு சில குடும்ப உறவினர்கள் ஆதிக்கத்தோடு அப்பாவி இளைஞர்களின் பல ஆண்டு கனவுகளைத் திருடுவதை அனுமதிக்க முடியாது , கூடாது. என மாரிதாஸ் கூறியுள்ளார்.

Exit mobile version