தி.மு.கவை பார்த்து விட்டு ஊழலை பற்றி பேசுங்கள் மாஸ் காட்டிய ஸ்மிருதி இராணி! பம்மி பதுங்கிய ராகுல்!

Smriti Irani

மிஸ்டர் ராகுல் காந்தி அவர்களே நீங்கள் ஊழலைப் பற்றி பேசும்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள் என ராகுல் காந்தி பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலளித்து பேசினார்.

பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இந்த விவாதத்தின் மீது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று பேசினார்.

மக்களவையில் ராகுல் காந்தி பேசுகையில் இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள் என்றார். இந்த பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சுக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘மணிப்பூர் பிரிக்கப்படவில்லை. அது இந்தியாவின் ஒரு பகுதி. அதனை பிரிக்க முடியாது.’ என்றார்.

, மக்களவையில் தொடர்ந்து பேசிய ஸ்மிரிதி ராணி “ராகுல் பேசுகையில் பாரத மாதாவின் மரணத்தைப் பற்றிப் பேசினார், காங்கிரஸ் எதிர்க்கட்சியினர் கைதட்டினர். நீங்கள் இந்தியா கிடையாது இந்தியா என்பது ஊழலுக்கு எதிரானது. வாரிசு அரசியலுக்கு எதிரானது. ஊழலைப் பற்றி பேசும்போது உங்களது கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள். இந்தியா ஊழலை நம்பவில்லை, வாரிசு அரசியலை நம்பவில்லை.

“காஷ்மீர் பண்டிட் – கிரிஜா திக்கு – காஷ்மீரில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இதை ஒரு திரைப்படத்தில் காட்டியபோது, சில காங்கிரஸ் தலைவர்கள் இதை பிரச்சாரம் என்று கூறினர். அதே கட்சித் தலைவர்கள் இன்று நீதியைப் பற்றி பேசுகிறார்கள்.” எனவும் ஸ்மிருதி இராணி தொடர்ந்து பேசினார். மேலும் எதிர்கட்சியினரை பிரித்து மேய்ந்துவிட்டார்.

ஸ்மிருதி இராணி பேச்சுக்கு பதிலளிக்கமுடியாமல் எதிர்கட்சியினர் கூச்சல் குழப்பமிட்டார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தனது பேச்சினை தொடர்ந்தார். ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காங்கிரஸ் மவுனம் சாதிக்கிறது

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் தான் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் . அதற்கு சமீபத்திய உதாரணம் பில்வாரா. 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடலை வெட்டி, உலைகளில் வீசியெறிந்தனர். மேற்குவங்கத்திலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன. ஆனால் அதுபற்றி எதுவும் பேசப்படுவதில்லை.” என்றும் நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இராணி அதிரடியை காட்டினார். ஸ்மிருதி இராணி பேச்சுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார் எதிர்க்கட்சியினர்.

Exit mobile version