நேரு குடும்ப 3 அறக்கட்டளை மோசடி விசாரணையை கையில் எடுத்த அமித் ஷா! கலக்கத்தில் காங்கிரஸ்

நேரு குடும்பம் நடத்தி வரும் மற்றும் அவர்களின் தொடர்பு உள்ள மூன்று அறக்கட்டளைகளில் வரும் வருமானம் முறைகேடன நடவடிக்கையில் மூலம் வந்துள்ளது என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் முறைகேடு தொடர்பாக, விசாரிக்க மத்திய அரசு தனி குழு ஒன்றை அமைத்துள்ளது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றால் வருமான வரி மற்றும் வெளிநாட்டு நன்கொடைவாங்கியதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளது இந்த 3 தொண்டு நிறுவனங்களும் விதிகளை மீறியுள்ளதா என்பதை விசாரிக்கவும் விதிகளை மீறியது தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்கவும் உள்துறை அமைச்சகம் ஒரு அமைச்சக குழுவை அமைத்துள்ளது என அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக ட்விட்டர் பதிவில், காந்தி குடும்பத்தால் நடத்தப்படும் அறக்கட்டளைகளால் பணமோசடி தடுப்பு சட்டம், வருமான வரி மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு போன்ற சட்டங்களை மீறியது தொடர்பான விசாரணையில் கவனம் செலுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழுவிற்கு அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு இயக்குநர் தலைமை தாங்குவார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சி ‘வெட்கக்கேடான மோசடியில்’ ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது. ஆட்சியில் இருந்தபோது, மன்மோகன் சிங் அரசு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விசாரணையில் அமித்ஷா நேரடியாக களமிறங்கியுள்ளதால் ஒட்டுமொத்த காங்கிரசும் சற்று கலக்கத்தில் இருக்கின்றது. காங்கிரசின் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் ஆராயபோவதாக செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளது

காங்கிரஸ் ஆட்சியின் போது பிரதமரின் தேசிய நிவாரண நிதி என்பது பேரிடர்களின் போது ஏழை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கானது, அதிலிருந்த பணத்தை , ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துள்ளது. நிதி அளித்தது பிரதமருக்கு தெரியுமா அப்போது பிரதமர் தேசிய நிவாரண நிதியகத்திற்கு தலைமை பொறுப்பில் இருந்தவர் யார்? சோனியா காந்தி. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைமை பொறுப்பில் இருந்தவர் யார்? சோனியா காந்தி. நெறிமுறைகள், செயல்முறைகளை புறக்கணித்து வெளிப்படைத்தன்மையை பற்றி கவலைப்படாதது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version