குழந்தைகளைத் தாக்கும் மைக்ரான் வைரஸ் !மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையளிப்பதாக தென்னாப்பிரிக்கா மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் ஓமிக்ரான் மூலம் தென்னாப்பிரிக்காவில் 4ஆவது அலை தொடங்கிவிட்டதாகவு்ம அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 16,055 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 பேர் பலியாகிவிட்டனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பஹாஹ்லா கூறுகையில், கடந்த முறை கொரோனா பாதிப்பின் போது குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை. அவர்கள் மருத்துவமனைகளில் கூட அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் மூன்றாவது அலையில் குழந்தைகள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் அவர்கள் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள், 15 முதல் 19 வயதினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

கொரோனா பரவல் ஆனால் தற்போது 4ஆவது அலை தொடங்கிவிட்டது. கொரோனா பரவல் அனைத்து வயதினருக்கும் பரவுவதை நாங்கள் பார்க்கிறோம். குறிப்பாக 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எதிர்பார்த்தது போலவே குழந்தைகளிடம் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருக்கிறது.

பாதிப்பு ஆனால் தென்னாப்பிரிக்காவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அவர்களுக்கு அடுத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இனி வரும் வாரங்களில் குழந்தைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு முன்னர் இருந்த அலைகளை காட்டிலும் இந்த 4ஆவது அலை வித்தியாசமாக இருக்கிறது.

மருத்துவமனைகளில் அனுமதி 5 வயதுக்குள் கீழ் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஓமிக்ரான் வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மிக விரைவில் இத்தகைய பாதிப்பு இருப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். அதுபோல் கர்ப்பிணிகளுக்கும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version