ஸ்டாலின் மற்றும் திமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா? வானதி சீனிவாசன் கேள்வி.

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இருமொழி கல்வி முறையில் தான் நடத்துகிறார்களா என்றும்,தங்களுடைய குழந்தைகள் தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட தயாரா? என தமிழக பா.ஜ.க. மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் ரக் ஷா பங்தன்விழா நடைபெற்றது.

இதில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு “ராக்கி கயிறு” கட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இருமொழி கல்வி முறையில் தான் நடத்துகிறார்களா என்றும், திமுகவினர் தங்களின் குழந்தைகளை தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்க வைப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட தயாராக உள்ளார்களா என்றும் கேள்விகளை எழுப்பினார்.

தேவை இல்லாமல் மக்களிடையே வீண்வதந்திகளை பரப்பவேணாடம்.மக்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கவேண்டும் என்று கூறினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version