மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – முருகன்

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார். 

ஸ்மார்ட் சிட்டி திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும், ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நீண்ட காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, கனவில் கூட எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டுவர நினைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், பட்டியல் இனத்தவர்களை திமுகவினர் தொடர்ந்து இழிவுபடுத்திய நிலையில், சமூக நீதி பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை எனவும் எல். முருகன் காட்டமாக தெரிவித்தார்.

2006 ம் ஆண்டு தேர்தலின் போது, ஏழை மக்கள் விவசாயம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக பொய் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற திமுக, ஆட்சிக்கு வந்த பின் அதை நிறைவேற்றினார்களா என கேள்வி எழுப்பிய எல்.முருகன், ஸ்டாலின் இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார். 

நீண்ட காலம் மத்தியில் அங்கம் வகித்த திமுக, எப்படி ஊழல் செய்வது என்பதில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர, மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வர அக்கறை காட்டவில்லை எனவும் எல்.முருகன் காட்டமாக விமர்சித்தார். 

Exit mobile version