இது தான் விடியலா முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம்  சில நாட்களாக குறைந்து வருவதால்,  ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு தொடர்ந்து உத்தரவு பிறப்பித்து வருகின்றது.

ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக,  தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து தொற்று குறைந்து வரும் எஞ்சிய 27 மாவட்டங்களில் டாஸ்மாக் ( TASMAC) கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க திமுக அரசு அனுமதித்துள்ளது.

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, தற்போதைய திமுக அரசின் அறிவிப்பிற்கு ஏன் மவுனம் காக்கிறார் என்றுகோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அண்ணனிடம் கேள்வி எழுப்புவீர்களா என பதிவிட்டுள்ளார்

தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும், அதிமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்தாலும், தற்போது  முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பத்தில் தமிழக அரசு ஏன் அவசரம் காட்டுகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

கடந்த அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக குடியை கெடுக்கும் அதிமுக மற்றும் குடிகெடுக்கும் எடப்பாடி உள்ளிட்ட ஹேஷ்டேக்குள் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டன. தற்போது, அது போலவே குடிகெடுக்கும் ஸ்டாலின், குடியை கெடுக்கும் திமுக உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்ட்டு வருகின்றன.

Exit mobile version