பெண்களுக்கு பிரதமர் மோடி பரிசு சிலிண்டர் விலை ரூ.400 அதிரடி குறைப்பு.

நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிலும் உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று (ஆக.,29) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஸ் சிலிண்டர் விலை குறைப்பு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பயனாளிகளுக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: அனைத்து பயனர்களுக்கும் பிரதமர் மோடி வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களின் விலையில் ரூ.200 குறைக்க முடிவு செய்துள்ளார். இது ரக்ஷா பந்தன் கொண்டாடும் விதமாக, நாட்டு பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு.

உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பயனாளிகளுக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியமாக வழங்கப்படும். இதன்மூலம் 10.35 கோடி பேர் பயனடைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி செலவினம் ஏற்படும். எனவே இனி உஜ்வாலா திட்டத்தின்கீழ் காஸ் சிலிண்டர் வாங்குவோர் ரூ.700க்கும், மற்றவர்கள் ரூ.900க்கும் சிலிண்டர் வாங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version