பி.எம்.கேர்ஸ் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! காங்கிரசை வச்சு செய்த பா.ஜ.க

கொரோனா வைரஸ் தொற்று நாட்டை உலுக்கிய பின்னர், பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் கேர்ஸ் நிதியை அமைத்து மக்களை நிதியத்திற்கு பங்களிக்க அழைத்திருந்தார். தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் போன்ற அவசரநிலைகள் அல்லது துயரங்களை எதிர்த்துப் போராடுவதற்காக பொது நன்கொடைகளைப் பெறுவதற்காக இந்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி PM CARES நிதி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

இந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் உள்ளார், அதன் உறுப்பினர்களில் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் அடங்குவர்.

இந்த நிதியில் சேகரிக்கப்பட்ட முழு பணத்தையும் பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரியிருந்தார்.

PMNRF ஐ CAG ஆல் தணிக்கை செய்யவில்லை, ஏனெனில் இந்த நிதி இரண்டு வரி செலுத்துவோரின் பணத்தையும் பெறவில்லை, ஆனால் தன்னார்வ நன்கொடைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது.

இதனையடுத்து பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி, சி.பி.சி.எல்., எனும் தனியார் தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், பிஎம்கேர்ஸ் நிதியை தேசியப் பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது என் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அவரின் டுவிட்டரில் பதிவிட்டதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ராகுல் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் வாடகை செயல்பாட்டாளர்களுக்கு கிடைத்த பெருத்த அடி. பி.எம் கேர்ஸ் நிதிக்கு பெரும் பங்களிப்பு செய்த பொதுமக்கள், ராகுலின் பேச்சை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். தங்கள் பாதையை ராகுல் சரிசெய்வாரா.அல்லது மேலும் அவமானப்பட போகிறாரா..

பிரதமர் தேசிய நிவாரண நிதியை, ஒரு குடும்பம், பல ஆண்டுகளாக தங்களுக்கானது என நினைத்திருந்தது.

மக்கள் அளித்த நிதியையும், தங்கள் குடும்ப அறக்கட்டளைக்கும் வெட்கமின்றி மாற்றியது. தங்கள் பாவங்களை கழுவவே, பி.எம். கேர்ஸ் நிதியத்துக்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது.

இதனை நாட்டு மக்கள் நன்றாக அறிவர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version