விஜய் மல்லையாவை தட்டி தூக்கிய மோடி அரசு! ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது !

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளிடத்தில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கியவர் கிங்பிஷர் நிறுவுனர் விஜய் மல்லையா. விஜய் மல்லையா கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து ஓடினார். விஜய் மல்லையாவை, இந்தியாவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசு பல சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வந்தது. இந்த நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, விஜய் மல்லையாவை அடைத்து வைக்கப் போகும் சிறை விவரம் அறைகளின் நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்று வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது .

இதையடுத்து, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை சிறை வைக்கத் போகும் இரு அடுக்கு கட்டடம், அங்குஏள்ள அறைகள் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த வீடியோ இந்தியா சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றை ஆராய்ந்த நீதிமன்றம் கடந்த மே 14- ந் தேதி விஜய் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவை பிறப்பித்தது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 28 நாள்களுக்குள் விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்பட வேண்டும். உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 21 நாள்கள் முடிந்து விட்டன. விஜய் மல்லையாவை அடைத்து வைக்க மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையும் தயாராக உள்ளது.

இந்த சிறையில்தான் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப், அபு சலீம், சோட்டராஜான் போன்ற தாதாக்கள், ஐ.என்.எக்ஸ் மீடியா உரிமையாளர் பீட்டர் முகர்ஜி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடிக்கு நெருக்கமாக விபூல் அம்பானி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயிலுக்குள் புதுமுகமாக விஜய் மல்லையா நுழையப் போகிறார்.

‘நான் வாங்கிய கடன் 9,000 கோடியை அப்படியே செலுத்தி விடுகிறேன் என்னை நல்லபடியாக தாய் நாட்டில் வாழ விடுங்கள்!’ என்று மத்திய அரசை விஜய் மல்லையா கெஞ்சியும் பார்த்தார். ஆனால், மத்திய அரசு கிஞ்சித்தும் மனம். இறங்கவில்லை. வட்டியுடன் செலுத்த வேண்டுமென்று கறாராக கூறிவிட்டது.

கடைசி முயற்சியாக, ‘ அரசியல் தஞ்சம்’ என்ற ரீதியில் தப்புவதற்காக விஜய் மல்லையா முயற்சி செய்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்றே சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள். இதனால், எந்த நேரத்திலும் விஜய் மல்லையா இந்தியா அழைத்து வரப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்பவா , அப்பவா என மும்பை விமான நிலையத்தில் விஜய் மல்லையாக எதிர்பார்த்து மீடியாக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. விஜய் மல்லையா குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் பறந்து கொண்டிருக்கின்றன.

விஜய் மல்லையா மும்பைக்கு அழைத்து வரப்படும் போது, அவருடன் விமானத்தில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உடன் வருவார்கள். மும்பை சி.பி.ஐ அலுவலகத்தில் அவருக்கு உடல் பரிசோதனை நடைபெறும். பின்னர், நீரிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்படுத்தப்படுவார். முதலில் சி.பி.ஐ அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கும். தொடர்ந்து, அமலாக்கத்துறையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கும் .

விஜய் மல்லையா கடந்த 2016- ம் ஆண்டு மார்ச் 2- ந் தேதி இந்தியாவிலிருந்து தப்பினார். 2019- ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர் பொருளதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 2018- ம் ஆண்டு முதல் லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு நடைபெற்று வந்தது.

தற்போது, விஜய் மல்லையாவை தாய்நாட்டுக்கு கொண்டு வர, ஒரே ஒரு கையெழுத்துக்காக இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர். விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடங்க இங்கிலாந்து உள்துறைச் செயலர் பிரித்தி பட்டேல் கையொப்பமிட வேண்டும். இவர், உத்தரவு கொடுத்தால் போதும் விஜய் மல்லையா சிறைப்பறைவையாக மாறி விடுவார்.

விஜய் மல்லையாவுக்கு நல்ல நேரம் முடிந்து விட்டது என்றே சொல்கிறார்கள்!

நன்றி : POLIMER NEWS

Exit mobile version