கடந்த சில நாட்களாக உலக நாடுகளில் பெரும் பரபரப்பாக பேச வரப்படும் ஒரு நிகழ்வு கடந்த வாரம் பிரதமர் மோடி கேரளா சென்ற பொழுது அங்கிருந்து லட்சத்தீவுக்கு சென்று கடலில் நீச்சல் வைக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
மாலத்தீவுக்கு இணையானது லட்ச தீவு. லட்சத்தீவு பிரபலமானல்மாலத்தீவின் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையும். இதன் காரணமாக பிரதமர் மோடி பதிவிட்ட லட்சத்தீவு படங்கள் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறாகபேசிய சம்பவம் உலக அளவில் பெரும் பேசு பொருளாக மாறியது.
இந்தியாவின் நட்புநாடுகள் பல்வேறுபட்ட தரப்பினரின் அழுத்தத்தை தொடர்ந்து மூன்று அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு சஸ்பெண்ட் செய்தது. தற்போது மாலத்தீவில் நடைபெற்றுவரும் அரசு சீன ஆதரவு அரசு ஆகும். இதன் காரணமாகவே மாலத்தீவு அவ்வப்போது இந்தியாவை சீண்டி சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை மேற்கொள்கிறது. மேலும் இந்த அரசு சீனா சொல்லும் பணிகளையே செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போக்கிற்கு எச்சரிக்கும் வகையில் தான் பிரதமர் மோடியின் லட்ச தீவு பயணம் அமைந்துள்ளது.
ஏனென்றால் மாலத்தீவின் வருவாய் என்பது அதன் சுற்றுலாவை நம்பித்தான் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா மக்களையே நம்பி உள்ளது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் மக்களில் 11 சதவீதம் பேர். இந்திய மக்களின் சுற்றுலா வருவாய் என்பது மாலத்தீவு அரசிற்கு இன்றியமையாதது. ஆனால் மாலத்தீவு சீன பேச்சினை கேட்டு இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு தான் லட்சத்தீவு. .
மேலும் மோடியின் ராஜதந்திரம் மாலத்தீவை மொத்தமாக காலி செய்யும் என்கிறார்கள், அது என்னவென்றால் இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யா நாட்டு மக்கள் 10 சதவீதம் பேர் மாலத்தீவு நாட்டிற்கு சுற்றுலா செல்வதாகவும் கூறப்படுகின்றது. இதே போல் இந்திய நாட்டின் நட்பு நாடுகள் பலவற்றில் இருந்து சுமார் 70 சதவீத மக்கள் மாலத்தீவு நாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர். இந்தியாவை பகைத்து கொள்வதால் மாலத்தீவிற்கு பெரும் நஷ்டம் எனபது எடுத்துக்காட்டாக பெரும்பாலான இந்தியர்கள் மாலத்தீவிற்கு செல்வதை நிறுத்தியுள்ளார்கள். சுமார் 7500 இந்தியர்கள் மாலத்தீவிற்கு செல்ல இருந்த ட்ரிப்பை கேன்சல் செய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தான் பிரதமர் மோடியினை விமர்ச்சித்த மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் இந்திய நாட்டிலே லட்சத்தீவு எனும் அழகான ஒரு இடம் இருக்கும் பொழுது அதனை நாம் மேம்படுத்தி நமது இந்திய நாட்டிற்கும் வருவாய் ஏற்படுத்தினால் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
இதற்கு ரஷ்யா அதிபர் புட்டின் உள்ளிட்ட இந்தியாவின் நட்பு நாடு அதிபர்கள் ஆதரவு இருக்கும் என கருதப்படுகிறது