மோடி அரசு மக்கள் நலனை காக்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைப்பு.

நாட்டில் நாளுக்கு நாள் ரானா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நோய்த் தொற்றில் கடுமையாக பாதிக்கும் நபர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பவர்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலையை மோடி அரசு குறைத்துள்ளது

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் வர்த்தக விலையில், மோடி அரசு உச்சவரம்பு நிர்ணயம் செய்ததையடுத்து, அவற்றின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் வர்த்தக விலை உச்ச வரம்பு, விநியோகஸ்தர் அளவிலான விலையில் 70 சதவீதம் இருக்க வேண்டும் என தேசிய மருந்து விலை ஆணையம் கடந்த 3ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.  இதையடுத்து 104 தயாரிப்பு நிறுவனங்கள் / இறக்குமதியாளர்கள் 252 பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் அதிகபட்ச சில்லரை விலையை மாற்றியமைத்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். 

இவற்றில் 70 தயாரிப்புகள் மற்றும் பிராண்டின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆக்ஸிஜன் செறிவூட்டி ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.54,337 வரை குறைந்துள்ளது. 58 பிராண்டுகள் 25 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளன. 11 பிராண்டுகள் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளன. 252 தயாரிப்புகளில் 18 உள்நாட்டு நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை.

மத்திய அரசின் வர்த்தக விலை சீரமைப்பு மூலம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நியாயமற்ற லாப வரம்பை குறைத்தது, ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்கும் நுகர்வோருக்கு சேமிப்பை உறுதி செய்துள்ளது. 

கீழ்கண்ட பிரிவுகளில் அதிகபட் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது: 

* சிறிய ரக – 5LPM (80 தயாரிப்புகளில் 19 தயாரிப்புகளின் விலை குறைப்பு)

* சிறிய ரக-  10LPM ( 32 தயாரிப்புகளில் 7)

* நிலையான – 5LPM ( 46ல் 19)

* நிலையான – 10 LPM (27ல் 13)

அனைத்து ரக ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் மாற்றியமைக்கப்பட்ட விலை ஜூன் 9 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுடன் பகிரப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. 

Exit mobile version