பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சிக்கு வந்தடைந்த பாரத பிரதமர பிரதமர் மோடி 20 ஆயிரம் கோடிக்கு பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும் அவர் தமிழ் மற்றும் தமிழகம் குறித்து உணர்ச்சியுடன் பேசியது அனைவரையும் ஈர்த்துள்ளது.
மேலும் தமிழகத்திற்க்கு வழங்கியுள்ள நிதி குறித்தும் பேசிய மோடி புள்ளி விவரங்களுடன் சுட்டி காட்டியது முதல்வர் ஸ்டாலினுக்கு வியர்வை வரவைத்தது. எப்போதும் போல் நிதி குறித்து பிரதமர் பேசமாட்டார் என எண்ணி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக பேசினார்..
அதற்கு பதிலடி தந்த பிரதமர் மோடி கடந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட முறை சுற்றுப்பயணம் செய்துள்ளனர். அதே நேரத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக நிதியை வழங்கியுள்ளது. 2014க்கு முந்தைய பத்தாண்டுகளில், மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசிடமிருந்து ரூ.120 லட்சம் கோடி கிடைத்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்தக் காலகட்டத்தில் தமிழகத்துக்கு 2.5 மடங்கு அதிகப் பணம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதிலும் திராவிட கட்சிகளின் முகத்தை கிழித்தார் பிரதமர் மோடி..
தமிழ் என்றால் நாங்கள் தான் மார்தட்டி கொண்டிருந்த திராவிட கட்சிகளுக்கு பிரதமர் மோடியின் தமிழ் பேச்சு பேரிடியை தந்துள்ளது திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழாவில் மோடி பேசிய பேச்சு, பாஜ.க வுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.
நேற்று அந்த விழாவில் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடிபேச துவங்கியவுடன் “வணக்கம்… தமிழ் குடும்பங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” என கூறியவுடன் அங்கு அரங்கமே மோடி என்ற முழக்கத்துடன் அரங்கமே அதிர்ந்தது.
தனது பேச்சின் முதலே அரங்கத்தில் இருந்தவர் திமுகவினர் உட்பட அனைவரையும் தன்வசப்படுத்தி கொண்டார் மோடி. இந்த சம்பவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் மோடி அடிக்கடி, “என் குடும்ப உறவுகளே, சொந்தங்களே, எனது தமிழ் குடும்பமே” கூறி அனைவரையும் ஈர்த்தார்.
“தமிழ் உங்களுக்கு மட்டுமா சொந்தம் எங்களுக்கும் அது சொந்தம் தானே” என்று மோடி சொல்லாமல் சொல்லியது, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதியின் ஸ்டைல் அங்கு பரிதாபமாக சிதறியது.தமிழ், தமிழர் என்று பேசினால் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம்” என்ற எளிய பார்முலா, அங்கு ஈசியாக கடைவிரிக்கப்பட்டது.
அதுமட்டுமா, மாணவர்களிடம் பேசிய மோடி “எனது மாணவக் குடும்பமே” என்று தமிழில் அடிக்கடி குறிப்பிட்டு திராவிட கட்சிகளின் அடிவயிற்றில் நெருப்பை வைத்தார். மோடியின் இந்த ஸ்டைலுக்கு மாணவர்கள் கரகோஷம் செய்தனர். இந்த கரகோஷம் சில திராவிட தலைவர்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது.
முன்பெல்லாம் தமிழ் பற்றி பலமுறை மோடி பேசியிருந்தாலும் இம்முறை அவர் தமிழர்கள், தமிழ் குடும்பங்கள் என பேச்சுக்கு பேச்சு குறிப்பிட்டு தன்னையும் தமிழர்களில் ஒருவராக காட்டிக் கொண்டார்.இது மோடியின் முந்தைய பேச்சிலிருந்து நிறைய மாறுபட்டது. மோடியின் இந்த புதிய அணுகுமுறை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.