தமிழகம் முழுதும் நேற்று நடந்த ஐந்தாம் கட்ட மெகா சிறப்பு முகாமில், 22.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சீன வைரஸ் கொரோனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமானது 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவது.நாடு முழுவதும் ஒரு இயக்கமாக மாறியுள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடின்றி இலவச தடுப்பூசிகளை கொடுத்து வருகிறது மத்திய அரசு.மேலும் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஞாயிறு தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.இதுவரை நடந்த நான்கு கட்ட மெகா முகாம்களில், 87.80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஐந்தாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம், சென்னையில் 1,600 மையங்கள் உட்பட மாநிலம் முழுதும், 32 ஆயிரத்து 17 மையங்களில் நேற்று நடந்தது 22.52 லட்சம் பேர் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள்
சென்னையில் 1.63 லட்சம்; கோவையில் 1.09 லட்சம் சேலத்தில் ஒரு லட்சம் பேர் உட்பட, மாநிலம் முழுதும் 22.52 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இவர்களில், 11.02 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என அரசு தெரிவித்துள்ளது.