ஆப்கானில் ரஷ்யாவை வைத்து ஆடு்ம் மோடி-தலிபான்களை வைத்து இந்தியாவுக்கு இனிமா கொடுக்கலாம் என்று பாகிஸ்தான் சீனா காத்திருக்க அதே தலிபான்களுக்கு எதிராக ரஷ்யா உதவியுடன் இந்தியா உருவாக்கி வரும் அரசியல்.
பாகிஸ்தான் சீனாவுக்கு பதிலடி அளிக்கும் அளவிற்கு போய்க்கொண்டு இருக்கிறது.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலைவர் பெய்ஸ் ஹமீது காபூலுக்கு சென்றதை வைத்து பாருங்கள் பாகிஸ்தானின் பராக்கிரமத்தை என்று பாகிஸ்தான் மீடியாக்கள் கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள்.
ஆனால் இப்பொழுது ஆப்கான் விவகாரம் பற்றி விவாதிக்க அமெரிக்காவின் சிஐஏ தலைவர் பில்பர்ன்ஸையும் ர்ஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிக் கோலை பட்ருசேவ் அவர்களையும் இந்தியாவுக்கே வரவழைத்து ஆலோசித்து வருகிறார் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
இதையெல்லாம் பார்த்து வரும் பாகிஸ் தான் மீடியாக்கள் இப்பொழுது இந்தியா வின் ராஜதந்திரத்தின் முன் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலைவர் பெய்ஸ் ஹமீது காட்டிய படமெல்லாம் இனி எடுபடாது என்று இப்பொழுது கூற ஆரம்பித்துவிட்டன.
அதிலும் ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புஆலோசகரான நிக்கோலை பட்ருசேவ்ரஷ்ய அதிபரான புதினின் வலதுகையாக இருப்பவர்.சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்தபொழுது சோவியத் யூனியனின் புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியான கேஜிபியில் இருந்து ஆப்கான் விவகாரங்களை கவனித்தவர் நிக்கோலைபட்ருசேவ்.
பிரதமர் மோடி நிக்கோலை பட்ருசேவை அழைத்து நீண்ட நேரமாக ஆப்கானிஸ்தான் விவகாரம் பற்றி ஆலோசனை நடத்திய பிறகு ரஷ்யா தலிபான்கள் விசயத்தில் இந்தியாவோடு் இணைந்து செயல்பட இருக்கிறது. ரஷ்யா இந்தியாவோடு தலிபான்கள் விசத்தில் இணைந்து செயல்படும் பொழுது ஈரானும் இந்தியாவுக்கு துணையாக வந்து நிற்கும்.
துருக்கியை கூட தலிபான்விசயத்தில் ரஷ்யாவை வைத்து இந்தியா ஒதுங்கி இருக்க வைக்க முடியும்.இந்தியாவுக்கு எதிராக தலிபான்களை வைத்து அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடன் சீனா ஆப்கானிஸ்தானில் வைத்து உருவாக்கி உள்ள பனிப்போரில் மோடிய ரஷ்யாவை நேரடியாக துணைக்குவைத்துக் கொண்டு பதிலடி கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்.