ஆட்டத்தை ஆரம்பித்த சந்திரயான்-3 நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தவுடன் நிலவின் புகைப்படம் !

ஆட்டத்தை ஆரம்பித்த சந்திரயான்-3 நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தவுடன் நிலவின் புகைப்படம்!

சந்திரயான்-3 நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரோ ஞாயிற்றுக்கிழமை சந்திரயான்-3 பார்த்த நிலவின் வீடியோவை வெளியிட்டது. பல பள்ளங்கள் கொண்ட நீல பச்சை நிறத்தில் சந்திரனை வீடியோ காட்டியது.

கடந்த மாதம் ஜூலை 14-ஆம் தேதி அன்று நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 3 புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியைச் சுற்றி தனது சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி வந்தது. புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி சந்திரயான் 3 விண்கலம், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து உந்தித் தள்ளப்பட்டது.

தொடர்ந்து முன்னேறி சென்று கொண்டிருந்த சந்திரயான் 3 நேற்று இரவு சரியாக 7.15 மணியளவில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது பயணிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சந்திரயான்-3 ல் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்பக் கேமராவினால் எடுக்கப்பட்ட நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Exit mobile version