திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளர் விஜயரகு, முஸ்லீம் பயங்கரவாதிகளால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த விஜயரகுவின் படுகொலையை இந்து அமைப்புகள் மட்டுமே கண்டித்து உள்ளன.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு தாடி வளர்ந்து விட்டதே என்று ரத்தக் கண்ணீர் சிந்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. அவர் திமுகவின் தலைவர் மட்டுமல்ல தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்கூட. அப்படியிருந்தும், கொலை செய்யப்பட்டவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தும் மு.க.ஸ்டாலின் இந்த படுகொலையை ஒப்புக்காககூட கண்டிக்கவில்லை.
அதேபோல தலித் சமுதாய மக்களுக்காக குரல் கொடுப்பதாக பித்தலாட்டம் செய்து வரும் ப.சிதம்பரம், வைகோ, கி.வீரமணி, கம்யூனிஸ்ட் தலைவர்கள், கனிமொழி, கமலஹாசன் போன்றவர்களும் வாயே திறக்கவில்லை.
இதைவிட கொடுமை, தலித் மக்களை வைத்தே பிழைப்பு நடத்தி வரும் திருமாவளவனுக்கு, அதே தலித் சமுதாயத்தை சேர்ந்த விஜயரகுவின் படுகொலையை கண்டிக்க மனம் வரவில்லை. அவர் படுகொலை செய்யப்பட்l விஜயரகுவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடவில்லை.
இதிலிருந்தே திருமாவளவன், மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் மிகப்பெரிய பித்தலாட்ட பேர்வழிகள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. தலித் மக்களின் போராளிகள் என்பதெல்லாம் வெற்று வேஷம் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு உள்ளார்கள்.
இதற்கெல்லாம் வட்டியும், முதலுமாக வருகின்ற தேர்தல்களில் திருமாவளவனுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக மக்கள் வழங்குவார்கள் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















