பெங்களுரு ;கிருஷ்ண ஜெயந்தி நாளில் ‘அல்லாஹ் ஹு அக்பர்’ , ‘நாரா இ தக்பீர்’ என கோஷமிட்டு முஸ்லீம் கும்பல் கலவரம்

பெங்களூரில் முகநூலில் பதிவிட்ட ஒரு சின்ன கருத்துக்கே அங்குள்ள முஸ்லிம்கள் ஒன்றிணைந்து கலவரம் செய்துள்ளார்கள். ஆனால் தமிழ் நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் இந்து விரோதிகள் என்று சொல்லுவார், கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்துவார்கள். முஸ்லீம் , கிறிஸ்டின் தவிர இந்துக்களை மட்டும் குறி வைத்து இங்குள்ள ஹிந்து விரோத அரசியல் கட்சி முற்றும் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இந்துக்களை கொச்சைப் படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள இந்து மக்கள் இவர்களை நன்றாக புரிந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

பெங்களூரு கிழக்கில் நேற்றிரவு முஸ்லீம் கும்பல் இரும்பு கம்பிகள், கூர்மையான உலோகப் பொருட்கள் மற்றும் பிற ஆயுதங்களுடன் நடத்திய கலவரத்தில் மூன்று பேர் இறந்தனர் மற்றும் பலபேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நகர போலீசார் 150 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவின் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்டா சீனிவாசமூர்த்தி இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர். இவரின் உறவினர் ஒருவர் முகநூலில் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.இந்நிலையில், டீ.ஜே. ஹள்ளியில் உள்ள எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீட்டின் முன்பு நேற்றிரவு கூடிய ஏராளமானோர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில், வீட்டின் மீது கற்களை எறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெட்ரோல் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டதுடன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீடு

நிலைமையைக் கட்டுப்படுத்த டி.சி.பி பீமாஷங்கர் குலேட் கே.ஜி.ஹள்ளி மற்றும் டி.ஜே.ஹள்ளி காவல் நிலையதிற்கு சென்றபோது, ​​கோபமடைந்த கும்பல் அவர் மீது கற்களை வீசியது. காவல்துறையினர் டி.சி.பியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றபோதும், கும்பல் காரைத் தாக்கி சேதப்படுத்தியது. அவர்கள் வாகனத்தின் ஓட்டுநரையும் தாக்கினர்.முஸ்லீம் கும்பல்கள் வெளியில் இருந்து வாயில்களைப் பூட்டி காவல் நிலையத்தில் கற்களை வீசின. இரண்டு டி.சி.பிகளின் இன்னோவாஸ் உட்பட குறைந்தது 10 வாகனங்கள் காவல் நிலையங்களுக்கு முன்னால் சேதமடைந்தன. டி.ஜே.ஹல்லி காவல் நிலையம் முன் இருந்த வாகனங்களுக்கும் கும்பல் தீ வைத்தது.

கே.ஜி.ஹள்ளி காவல் நிலையம்

வன்முறை சம்பவத்தை தங்கள் தொலைபேசி கேமராக்களில் படம்பிடிக்கும் ஊடக நபர்களை கூட இந்த கும்பல் தாக்கியது மற்றும் சுவர்ணா செய்தி ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர். கேமராக்கள் மற்றும் மொபைல்கள் பறிக்கப்பட்டு முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா

பெங்களூரு வன்முறை குற்றச்சாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார் . மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றும் , அமைதியை நிலைநாட்டுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட அதே வேளையில், நேற்று இரவு ஊடகவியலாளர்கள், காவல்துறை மற்றும் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் கூறினார்.

Exit mobile version