நல்லாண் பிள்ளை பெற்றாள் தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் 3 ஆம் ஆண்டு மகரஜோதி படி பூஜை விழா…..

நல்லாண் பிள்ளை பெற்றாள் தர்மசாஸ்தா ஐயப்பன்

நல்லாண் பிள்ளை பெற்றாள் தர்மசாஸ்தா ஐயப்பன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள  அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு மகரஜோதி மற்றும் படி பூஜை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

காலை 6.00 மணியளவில் கணபதிஹோமத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் காலை 10மணி அளவில் மாபெரும் நெய்யபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாபெரும் சமபந்தி அன்னதானம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மதியம் மூன்று மணி அளவில் 18 படி வேள்வி பூஜை நடைபெற்றது.மாலை 6.30 மணி அளவில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் இல.மகேந்திரன் அவர்களால் மகரஜோதி ஏற்றப்பட்டு மாபெரும் தீபாரதனை நடைபெற்றது.

இரவு 8 மணி அளவில் சன்ட மேளம் முழங்க மேளதாளம் உடன் பிரம்மாண்ட மின் அலங்காரத்தில் ஸ்ரீ அருள்மிகு தர்ம சாஸ்தா ஐயப்பன் வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 10 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஐயப்ப பக்தர்கள் இளைஞர்கள் என 2000 க்கும் மேற்பட்ட பலர் திரளாக கலந்து கொண்டு ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

Exit mobile version