நாதஸ் திருந்திட்டான் யார் சொன்னா அவனே சொன்னான் – ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை – விஜய் சேதுபதி..

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், ‘இந்தி படிக்க வேண்டாம் என்பது தமிழ்நாட்டில் நீண்ட காலமாகச் சொல்லப்படுகிறது’ என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார். உடனே இடைமறித்த விஜய் சேதுபதி, “இதுபோன்ற கேள்வியை அமீர்கானிடமும் கேட்டீர்கள்.

ஏன் இந்தக் கேள்வியை இப்போது என்னிடம் கேட்க வேண்டும். என்னைப் போன்றவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணம் என்ன? தமிழ்நாடு இந்தியைத் திணிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறது. படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இங்கு பலர் இந்தி படிக்கிறார்கள். இந்தி படிப்பதற்கும், திணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது

இதற்கு நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அப்போது ஏன் தமிழக அரசு பள்ளிகளில் இந்தி கற்று கொடுக்க கூடாது. வசதியானார்கள் எல்லாம் ஹிந்தி படிக்கிறார்கள். மற்ற பள்ளி மாணவர்கள் படிக்க கூடாதா? இந்தியை படிக்கலாம் என கூறும் நீங்கள் மூன்று மொழி திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கலாம்
உங்களுக்கு தேவை என்றால் இந்தியை வேண்டும் தேவை இல்லை என்றால் யாரும் படிக்க கூடாது இது தான் உங்களின் சித்தாந்தமா?

இந்தி படிக்கச் விருப்பம் உள்ள ஏழை மாணவர்கள் எப்படி இந்தி படிப்பார்கள்.. இதற்கு தடையே திராவிடம் தானே. இந்தியை எதிர்க்கும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கும் ஆனால் அரசு பள்ளிகளில் இந்தி இருக்காது. அரசியல்வாதிகள் மகன்கள் ஹிந்தி கற்கலாம் சினிமா துறையினர் ஹிந்தி படங்களில் நடிக்கலாம்.. தமிழக ஏழைகள் இந்தி கற்று கொள்ள கூடதா?

நீங்கள் சொல்வது நாதஸ் திருந்திட்டான் யார் சொன்ன அவனே சொன்னான் என்ற காமெடியை தான் நினைவுபடுத்துகிறது.

Exit mobile version