அன்னபூரணி படத்தை அதிரடியாக தூக்கிய நெட்ஃப்ளிக்ஸ்…மன்னிப்பு கேட்ட தயாரிப்பு நிறுவனம்.. தரமான சம்பவம் …

Annapoorani

Annapoorani

பல சர்ச்சைகளை கிளப்பிய நயன்தராவின் அன்னபூரணி படம்..netflix ott தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது சமையல் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படமானது முழுவதுமாக ஒரு சாராரை இழிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம் போல் இருந்தது. லவ் ஜிகாத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில், இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பிரியாணி செய்வதை மையமாக வைத்து மதத்தை பரப்புவதுதான் இந்த படத்தின் நோக்கம் தலைப்பே முதலில் சரச்சைக்குள்ளானது. ஏனென்றால் பிரியாணிக்கும் அன்னபூரணிக்கும் என்ன சம்பந்தம் என ஆரம்பித்தது சர்ச்சை.

மேலும் நயன்தாராவின் இஸ்லாமிய நண்பராக ஃபர்ஹான் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருந்த நிலையில், ராமர் வனவாசத்தின் போது அசைவம் சாப்பிட்டார் என்றும், எந்தக் கடவுளும் கறி சாப்பிடக்கூடாது என சொல்லவில்லை இடம் பெற்ற காட்சிகள் இடம்பெற்றது இதுவும் சர்ச்சையை கிளப்பியது

நடிகை நயன்தாராவின் 75-வது திரைப்படம், ‘அன்னபூரணி’. ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்த இந்தப் படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெளியானது. அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தப் படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது.

இந்த படத்தில், ஐயங்கார் வீட்டு பெண்ணான நயன்தாரா இருப்பார். அவரது நண்பராக ஃபர்ஹான் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருப்பார். நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க ராமர் இறைச்சி சாப்பிடுவார் என ஜெய் கூறுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டது. அர்ச்சகர் மகளான கதாநாயகி ‘நமாஸ்’ செய்வது போலவும் காட்சிகள்அமைக்கப்பட்டுள்ளன.

இது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ராமர், லட்சுமணன், சீதா ஆகியோர் மாமிசம் சாப்பிட்டார்கள் என வால்மீகி அவரது ராமாயணத்தில் அவ்வாறே எழுதி இருப்பதாக ஃபர்ஹான் [ஜெய்] கதாபாத்திரம் கூறியிருக்கும் இந்த விஷயம் ஹிந்து மக்களின் மத உணர்வை மிகவும் புண்படுத்துவதாக அன்னபூரணி பட குழுவினர் மீதும் நடித்த நடிகர்களான நயன்தாரா மற்றும் ஜெய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மும்பையை சேர்ந்த, சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பலரும் இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், தற்போது இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து பரிஷர் அமைப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அக்கடிதத்தில் ’படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்குவதாக உறுதியளிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Exit mobile version