சீனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்த நேரு… ஆனால் மோடி படேலை பின்பற்றுகிறார்…ஜெய்சங்கர் பளிச்… இன்று போல்அன்றிருந்தால்..

External affairs minister Dr S Jaishankar.

External affairs minister Dr S Jaishankar.

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இன்று போல் வலிமையான பாரதம் அன்றே இருந்திருந்தால் சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும்” எனவும் நேரு சீனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமெரிக்காவை ஒதுக்கியுள்ளார்.சீனாவுடனான போரின் போது அமெரிக்காவிடமிருந்து உதவியைப் பெறுவதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மிகவும் தயங்கினார். காரணம், அமெரிக்கா மீதான இந்தியாவின் விரோதம் வேரூன்றியிருந்தது.

இது குறித்து மேலும் பேசுகையில் . மோடி ஒரு சகாப்தம் இந்திய வெளியுறவு கொள்கைகளில் சகாப்தத்திற்கு முன் பின் என பார்க்கலாம். நம்முடைய அண்டை நாட்டுக்காரர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியாவுடன் இன்றைய அளவில் கூட்டாக செயல்படுகின்றனர். புதிய அதிகார இணைப்பை அவர்கள் காண்கின்றனர். நம்முடைய வரலாற்றை நாம் மீண்டும் கைப்பற்றுகிறோம்.

பிரதமர் மோடியின் அரசு, சீனா விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட அன்பு வாதத்துக்கு மாற்றாகச் சர்தார் வல்லபாய் படேலின் நடைமுறைவாதத்தைப் பின்பற்றுகிறது.

முன்னாள் பிரதமர் நேருவுக்கு, சர்தார் பட்டேலுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவுக்கு விட்டு கொடுப்பது தொடர்பாக அப்போதைய முதல்வருக்கு நேரு கடிதம் எழுதியுள்ளார். நேரு சீனாவுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளித்தார். கடந்த காலங்களில் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போதைய வலிமையான பாரதம் போல அன்றைய பாரதம் இருந்திருந்தால் சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும். இது என்னுடைய கற்பனையான ஒன்று அல்ல. இந்தியாவின் சொந்த நலன்களின் அடிப்படையில் அமெரிக்க உறவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நாம் அமெரிக்காவை நமது சொந்த நலன்களின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சீனாவுடன் நட்பு மனப்பான்மையோடு அணுகியபோது, அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் இந்தியாவின் நலன்கள் மற்றும் உலகத்தின்‌ இயக்கத்தைக் கருத்தில் கொண்டு யதார்த்தமான அணுகுமுறையைப் பின்பற்றினார்.

வல்லபாய் படேலுக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே சீனாவைப் பற்றிய கடித பரிமாற்றம், அவர்களின் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தும்.

ஜவஹர்லால் நேரு காட்டிய லட்சியவாதம், அன்பு வாதம் ஆகியவற்றுக்கு மாற்றாக, வல்லபாய் படேலின் யதார்த்தவாதத்துடன் பிரதமர் மோடி நெருக்கமாக ஒத்துப்போகிறார்.

இந்த விவகாரத்தில் ஜவஹர்லால் நேருவிற்கும் – வல்லபாய் படேலின் அணுகுமுறைக்கும் இடையே கருத்து வேறுபாடு முதல் நாளிலிருந்தே தொடங்கியிருக்கிறது. தற்போதைய இந்தியா – சீனாவிற்கு இடையேயான உறவு மரியாதை, விருப்பம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் மேம்படுத்தப்படுகிறது”

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version