உலக அரங்கில் நேரு தவறவிட்ட விட்ட இடத்தை பிடித்த பிரதமர் மோடி.

ஐ.நா பாதுகாப்பு கவுண்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ பவருடன் வீற்றிருக்க, 10 தற்காலிக நாடுகள் உண்டு

இந்த தற்காலிக நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றது, சமீபத்தில் அதாவது மோடி ஆட்சியில்தான் இந்த இடம் இந்தியாவுக்கு கிடைத்தது

ஐ.நா கவுண்சிலின் தலைவர் பதவி என்பது சுழற்சி அடிப்படையில் நடக்கும், அவ்வகையில் ஆகஸ்டு மாதம் உள்ளிட்ட சில மாதங்களுக்கு அந்த பதவி இந்தியாவுக்கு வரும்

பாரததுக்கு கிடைக்கும் அந்த பதவியினை பிரதமர் எனும் வகையில் மோடி அலங்கரிப்பார்

மற்றபடி இது நிரந்தர பதவி அல்ல எனினும், 1950களில் நேரு கோட்டை விட்ட பெரும் பதவிக்கு இந்தியா இப்பொழுது முன்னேறியிருக்கின்றது என்பது உண்மை

இப்பொழுது தற்காலிக தலைவராக பதவியேற்று ஐநா சபையில் தலைமை பொறுப்பேற்ற முதல் இந்திய பிரதமர் எனும் பெருமையினை மோடி பெறுகின்றார்

ஆனால் சில மாதங்களில் அப்பதவி அகலும்

இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுண்சிலில் நிரந்தர இடம் பெறுவதுதான் இந்தியாவின் இலக்கு, அதை நோக்கி காய் நகர்த்துகின்றது இந்திய அரசு

உலக அரங்கில் சீனாவினை தவிர அதற்கு எதிர்ப்பு இல்லை எனும் நிலையில் சில வருடங்களில் வீட்டோ பவருடன் நிரந்தரமாக இந்தியா அந்த கவுன்சிலில் அமையும், மோடி அரசு நிச்சயம் அதற்கு வழி செய்யும்

முதல் இந்திய பிரதமராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அலங்கரிக்கும் பாரத பிரதமர் மோடிக்கு உலகமும் தேசமும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கின்றது.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version