புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம்.!

மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் திராவிட இயக்கத்தினர் கடும் எதிர்ப்புகளை எழுந்துள்ள நிலையில்,  மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு,தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும். புதிக கல்விக்கொள்கையில் இலக்கை 2019-20ஆம் ஆண்டே தமிழகம் எட்டிவிடும். புதிய கல்விக்கொள்கையில் உள்ள நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனறு குறிப்பிட்டுள்ளார்.

 தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும். இருமொழி கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இருமொழி கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும்.

கல்விக்கொள்கையின் இலக்கை நடப்பாண்டிலேயே தமிழ்நாடு சாதித்து காட்டியுள்ளது. 2035-க்குள் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகிதத்தை 50% ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால்,புதிய கல்விக்கொள்கையின் இலக்கை 2019-2020-ம் ஆண்டிலேயே தமிழகம் எட்டிவிடும்.

தேசிய அளவில் 1:26 என உள்ள ஆசிரியர்,மாணவர்கள் விகிதாச்சாரம் தமிழகத்தில் 1:17 ஆக உள்ளது. தேசிய தேர்வுகளுக்கான நுழைவுத்தேர்வுகள் மாணவர்களுக்கு மேலும் சுமையாக இருக்கும். தேசியதேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். நுழைவுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு ஏற்காது என்று கடிதம் எழுதி உள்ளார்.

இது மாணவர்கள் மற்றும் கல்வியாளர் களிடையே சலசலப்பை ஏற்படுதியுள்ளது.

திராவிட கட்சியை சார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினர்களை ஹிந்தி படிக்க வைத்துவிட்டு ஏழைகுழந்தைகளை இலவசமாக கல்விகற்பதை தடை செய்வது நியாயமற்றது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கட்டுரை :- எழுத்தாளர் சுந்தர்.

Exit mobile version