மோடியுடன் வம்புக்கு நின்று ஆட்சியை இழந்தவர்களின் லிஸ்டில் கூடிய விரைவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒளியும் இடம் பெறுவார் என்று விரைவில் உலக செய்திகள் அறிவிக்கும் என்றே நேபாள தலைநகர் காத்மண்டில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இலங்கையின் ராஜபக்சே மாலைத்தீவுகளின் அப்துல்லா யாமீன் மலேசியாவின் மகாதீர் முகம்மது லிஸ்டில் மோடியினால் பதவி இழந்தவர்கள் லிஸ்டில் நேபாளத்தின் ஷர்மா ஒளியும் விரைவில் இடம் பிடிக்க இருக்கிறார்.
நேபாள தலைநகர் காத்மண்டில் உள்ள பலுவாட்டர் என்கிற இடத்தில் தான் நேபாள ஆட்சி பீடத்தில் உள்வர்களின் அதிகார பூர்வ இல்லங்கள் உள்ளன.இ ங்கு தான் நேபாள பிரதமர் ஷர்மா ஒளி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மன் பிரசந்தாவின் அதிகார பூர்வ இல்லங்கள் உள்ளன.
இங்கு தான் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக ளின் தலைமை இடங்கள் உள்ளன.அங்கு கடந்த புதன் கிழமை முதல் நேபாள ஆ ளும் கட்சிகளான ஷர்மா ஒளியின் தலை மையிலான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பிரசந்தா தலை மையிலான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நிலைக்குழு கூட்ட த்தை நடத்தி வருகின்றனஅதாவது இரண்டு ஆளும் கட்சிகளின் எம்பிக்களின் ஒருங்கிணைந்த கூட்டம்
நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட பிரதமர் ஷர்மா ஒளிக்கு எதிரா க அவருடைய சொந்த கட்சியான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் எம்பிக்களே வரிந்து கட்டிக்கொண்டு ஷர்மா ஒளியை ராஜினாமா செய்ய சொல்லி ரகளையில் ஈடுபட்டார்கள்.
இதனால் நேற்று நடைபெற்று வரும் நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஷர்மா ஒளி எஸ்கேப்பாகி விட்டார்.அதனால் நிலைக்குழு கூட்டத்தின் முடிவில் ஷர்மா ஒளியின் ராஜினாமாவே பெரும்பாலான எம்பிக்களால் முன் வை க்கப்பட்டு தீர்மானமாக கொண்டு வரப்படும் என்றே தெரிகிறது. ஆளும் நேபாள மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியிலும் ஆட்சியிலும் ஓரளவு ஷர்மா ஒளிக்கு ஆதரவு இருந்து வந்தது. ஆனால் என்னுடைய ஆட்சியை கவிழ்க்க இந்தியா சதி செய்கிறது என்று அவர் பகிங்கரமாக குற்றம்சாட்டியதை
கண்டித்து அவருடைய கட்சியிலும் எதிர்ப்பு அதிகரித்து விட்டது.
ஷர்மா ஒளியின் சொந்த கட்சியின் எம்பி க்களே ஷர்மா ஒளியை ராஜினாமா செய்யும் படி மல்லுக்கு நிற்பதால் ஷர்மா ஒளி வீட்டுக்கு போவது உறுதி. எந்த நேரத்திலு ம் ஷர்மா ஒளி ராஜினாமா என்கிற செய்தியை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
எழுத்தாளர் : விஜயகுமார் அருணகிரி
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















