Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

Oredesam by Oredesam
June 15, 2020
in இந்தியா
0
ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!
FacebookTwitterWhatsappTelegram
  • ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, பல்வேறு தொகுப்பு உதவிகளை அறிவித்துள்ளது. இது தவிர, தொழில்துறையினரின் பல்வேறு பிரிவினருக்கும், ஏராளமான நிதியுதவித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசரகாலக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடந்த வியாழக்கிழமை வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.29,490.81 கோடி அளவிற்கு கடனுதவி அளிக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில், ரூ.14,690,84 கோடி அளவிற்கு ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இதுவரை அனுமதிக்கப்பட்ட ரூ.3,112.63 கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,936,68 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. கோவிட்-19 ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கும், தொழிலுக்கு புத்துயிரூட்டவும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டது. விவசாயம், கல்வி, தொழில்துறையினருக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டதுடன், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும், பொதுத்துறை வங்கிகள் பெரும் பங்கு வகித்தன.
  • மாவட்டத்தில், முன்னோடித் தொழில் துறையினருக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், நடைபெற்ற வங்கிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், 2020/21 நிதியாண்டில் ரூ.2,484கோடி அளவிற்குக் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், விவசாயம் மற்றும் பயிர்க் கடனாக ரூ.2,334.98 கோடி அளவிற்கும், சிறு மற்றும் குறுந்தொழில் துறையினருக்கு ரூ.41.59 கோடியும், கல்விக் கடனாக ரூ.26 கோடியும், வீடு கட்டுவதற்கான கடனுதவியாக ரூ.31கோடியும், இதர முன்னுரிமைத் திட்டங்களுக்கு ரூ.41.08கோடி அளவிற்கும் கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
  • நிதிநெருக்கடிகளிலிருந்து மீண்டுவர மக்கள் தனிநபர் கடனுதவி பெறுவதற்கோ அல்லது சிறுதொழில் அல்லது வர்த்தகத்தைத் தொடங்க கடனுதவி பெற உதவுவதன் மூலம், வங்கிகள், சமுதாயத்தின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கின்றன. நிலையான வருமானம் இல்லாததால், வங்கிக்கடன் பெற்றவர்கள், ஊரடங்கு காலத்தில் கடனைத் திருபபிச் செலுத்துவது, மிகுந்த சிரமமான காரியமாக இருந்தது.

வங்கிக்கடன் பெற்றவர்கள், அதனை திருப்பிச் செலுத்த செப்டம்பர் மாதம் அவரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள போதிலும், கடனுதவி பெற்றவர்களில் பெரும்பாலானோர், கடன் தவணைகளுக்கு சலுகை காலத்தில் கூடுதல் வட்டி விதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, வேலையின்றி இருப்பதாகக் கூறும் பாளையம் கரூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.வசந்தா, இந்தக் காலகட்டத்தில், மீண்டும் தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

READ ALSO

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

  • கடனுதவிகளை திரும்பச் செலுத்துவதற்கான அவகாசம், முதலில் மூன்று மாதங்களும், அதன்பிறகு, செப்டம்பர் வரை மேலும் மூன்று மாதங்களும் நீட்டிக்கப்பட்டிருப்பதை கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த திரு.சிவகுமார், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வங்கியில் பெற்ற கடனுதவி மூலம், குளித்தலையில் முடிதிருத்தகம் நடத்தி வருவதாகக் கூறும் திரு.சிவகுமார், ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், நோய்த்தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, போதிய அளவிற்கு வாடிக்கையாளர்கள் வராததால், உரிய வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
  • மாவட்டம் பரளி கிராமத்தைச் சேர்ந்த திரு.மாணிக்கம் கூறுகையில், தொழிலை மேம்படுத்த வங்கிக் கடனுதவி பெற்ற தமக்கு, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளித்திருப்பதை வரவேற்றுள்ளார்.

இதேபோன்று, ஊரடங்கு காரணமாக, தாமும், தமது கணவரும் உரிய வேலை கிடைக்காமல் தவித்த நிலையில், சுய உதவிக் குழு மூலம் கடனுதவி வழங்கியது, நெருக்கடியான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவியதற்காக, பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.செல்லக்கண்ணு, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  • மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திரு.விஜய், வங்கிக் கடனுதவி பெற்று மளிகைக் கடை தொடங்கியுள்ளார். வியாபாரம் சீரடையும் போது தான் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தப் போவதாகவும் அவர் கூறுகிறார். தற்போது மிகக் குறைந்த வருமானமே கிடைத்து வருவதால், வங்கிக் கடனுக்கான வட்டித்தொகையை செலுத்துவது மிகுந்த சிரமமான காரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்கள், தாங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு, நிதியுதவி மற்றும் கடனுதவி தேவை என்றும் கருதுகின்றனர். வர்த்தகம், வியாபாரம் அல்லது தனிநபர் வாழ்வாதாரமாக இருந்தாலும் சரி, பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட, வங்கிகளின் ஒத்துழைப்பு அல்லது பிற வகையான உதவிகள் தேவைப்படுகிறது. மத்திய அரசும், நாட்டின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், மக்களும் தொழில் துறையினரும் நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்காக, தக்க நேரத்தில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது.

*

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

ராஜஸ்தான் மருத்துவமனையில் தப்லிகி ஜமாஅத்தின் 40 உறுப்பினர்கள் அடம்.

May 4, 2020
சமூகவலைத்தளங்ளை விட்டு விலக வேண்டாம் டிரெண்டிங் ஆகும் ‘நோ சார்’ ஹேஸ்டேக்

சமூகவலைத்தளங்ளை விட்டு விலக வேண்டாம் டிரெண்டிங் ஆகும் ‘நோ சார்’ ஹேஸ்டேக்

March 3, 2020
எவனாக இருந்தாலும் பாதிரியாரை கைது பண்ண வாடிகன் போப்பிடம் அனுமதி வேண்டுமாம்! திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகள் மெர்சி செந்தில் குமார்!

எவனாக இருந்தாலும் பாதிரியாரை கைது பண்ண வாடிகன் போப்பிடம் அனுமதி வேண்டுமாம்! திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகள் மெர்சி செந்தில் குமார்!

July 29, 2021

நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்.

February 24, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x