சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கடன் பெற்றவர்கள், அதனை திருப்பிச் செலுத்த செப்டம்பர் மாதம் அவரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள போதிலும், கடனுதவி பெற்றவர்களில் பெரும்பாலானோர், கடன் தவணைகளுக்கு சலுகை காலத்தில் கூடுதல் வட்டி விதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, வேலையின்றி இருப்பதாகக் கூறும் பாளையம் கரூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.வசந்தா, இந்தக் காலகட்டத்தில், மீண்டும் தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, ஊரடங்கு காரணமாக, தாமும், தமது கணவரும் உரிய வேலை கிடைக்காமல் தவித்த நிலையில், சுய உதவிக் குழு மூலம் கடனுதவி வழங்கியது, நெருக்கடியான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவியதற்காக, பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.செல்லக்கண்ணு, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

*

Exit mobile version