சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் — விஜயவாடா, வந்தே பாரத் ரயில்களின் சேவையை நாளை மறுதினம் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே நேற்று காலை 7:45 மணிக்கு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
எட்டு பெட்டிகள் கொண்ட நீல நிற வந்தே பாரத் ரயில், திருநெல்வேலியில் இருந்து தினமும் அதிகாலை 5:30 மணிக்கு புறப்படும்; மதியம் 1:50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மதியம், 2:50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு, 8.30 மணி நேரத்தில் செல்ல முடியும். இதே தடத்தில் செல்லும் மற்ற விரைவு ரயில்களை ஒப்பிடுகையில், மூன்று மணி நேரம் வரை பயண நேரம் குறையும். முறையான ரயில்வே அட்டவணை விரைவில் ெவளியாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Exit mobile version