தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையில் நேற்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கும்பகோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டார். . அண்ணாமலையை வரவேற்க கட்சி நிர்வாகிகள் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன, மேலும் பொதுமக்களும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை காண கூடியிருந்தார்கள.
அப்போது பேசிய அண்ணாமலை திமுக அமைச்சர்கள் குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டார்,இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது தான் செந்தில் பாலாஜி பொன்முடி என வரிசையாக தமிழக அமைச்சர்கள் ஊழல் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று செந்தில் பாலாஜி புழல் சிறையிலும் பொன்முடி அமைச்சர் பதவி இழந்தும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அண்ணாமலை அவர்கள் நேற்று கும்பகோணத்தில் பேசியபோது தி.மு.க. அமைச்சரவையில் உள்ள 35 அமைச்சர்களில், 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள் நடந்துக்கொண்டு இருக்கிறது. அவர்களது நிலை இப்போ, அப்போ என்பது தான். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடுத்த மூன்று அமைச்சர்கள் தயாராக உள்ளனர்.
பொன்முடி வீட்டில் ரெய்டு நடத்தினால் ரூ.47 கோடி வைப்பு நிதியாக ஒரு இடத்தில் இருக்கிறது. ஜெகத்ரட்சகன் எம்.பி வீட்டில் 1,250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த தகவல் கிடைத்துள்ளது. ஏழைகளின் வாழ்வு உயர வேண்டும் என திட்டமிட்டு வழங்கப்பட்ட நிதி, ஊழல் பெருச்சாளிகள் சுரண்டி எடுத்துள்ளனர். இந்தியாவில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் எந்த அரசிலும் இல்லை. தமிழகத்தில் தான் இருக்கிறது.
பாபநாசம் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, கடந்த 2000-ம் ஆண்டில் வெளிநாடுகளில் சட்டவிரேதமாக ஒரு கோடியே 54 லட்சத்து 88,000 பணம் பெற்றதாக சி.பி.ஐ பதிந்த வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை நீதிமன்றம் அளித்தது. உயர் நீதிமனறத்தில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். 11 அமைச்சர்களுடன் ஜவாஹிருல்லாவும் சிறைக்கு செல்வார். பாபநாசம் தொகுதியிலும் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது
என பேசியுள்ளது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
அறிவாலயம் அமைச்சர்கள் அனைவரும் சற்று நாவடக்கை கொள்ள வேண்டும் எனவும் தீர்மானமே போட்டிருக்கிறார்கள் அதனால் தான் யாரும் உதயநிதி பேசுவதற்கு எல்லாம் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை இனி கொடுக்க போவதும் இல்லை என பேச்சுக்கள் அடிபடுகிறது. உதயநிதியின் ஈகோ அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர் ஸ்டாலின் மீதும் திமுக அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை கோபம் கொண்டுள்ளார்களாம்……..