மன்னாா்குடியில் பாபா பக்ருதீனை கைது செய்தது என்.ஐ.ஏ! ஊடகங்கள் விவாதம் நடத்துமா! நாரயணன் திருப்பதி கேள்வி!

என்.ஐ.ஏ.

என்.ஐ.ஏ.

மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணிநேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவரை கைது செய்து ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்த சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். கிலாபத் இயக்கம் என்ற இஸ்லாமிய அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த இயக்கம் பங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணியளவில்,பாப பக்ரூதின் வீட்டுக்கு இரண்டு காா், ஒரு ஜீப்பில் வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீஸாா், பாபா பக்ருதீனிடம் பகல் 11.30 மணிவரை விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து 4.30 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னா் கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றி ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாபா பக்ருதீன் செல்லிடப்பேசியையும், கணினியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

மதுரையில் அண்மையில் நடைபெற்ற ஒரு குற்றச்செயலில் தொடா்புடைய நபரை கைது செய்த காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், பாபா பக்ருதீனுக்கும் அதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பக்ருதீனை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள்.

முன்னதாக, என்ஐஏ அதிகாரிகள் பாபா பக்ருதீன் வீட்டுக்குள் நழைந்தது முதல் வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைதளபக்கத்தில் கூறியுள்ளதாவது :

மன்னார்குடி ஆசாத் தெருவில் வசிக்கும் மன்னை பாவா பக்ருதீன் என்ற நபரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருக்கிறது. பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்த நபரின் செயல்பாடுகள் குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தேசிய புலனாய்வு முகமை இந்த நடவடிக்கையை எடுத்திருந்தாலும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசு தமிழக காவல்துறையை முடுக்கி விட்டு மேலும் இது போன்ற பயங்கரவாதத்திற்கு துணை புரியும் நபர்கள் அல்லது அமைப்புகள் தமிழகத்தில் செயல்படுகின்றனவா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

அரசியல் காரணத்திற்காக இதை அலட்சியப்படுத்தினாலோ, தயக்கம் காட்டினாலோ மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஊடகங்கள் இந்த விவகாரத்தில் பொறுப்போடு நடந்து கொண்டு உண்மையினை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். பயங்கரவாதத்திற்கு துணை போகும் நபர்களை, அமைப்புகளை அடையாளம் காண துணை நிற்க வேண்டும்.

மத அடிப்படைவாத சக்திகளை மக்களிடையே பகிரங்கப்படுத்துவதன் மூலமே மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அமைதி பூங்கா என அழைக்கப்படும் தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கான ஆதரவு ஏன்? என்ற கேள்விகளை, விவாதங்களை முன் வைக்குமா ஊடகங்கள்

Exit mobile version