கடந்த ஏப்ரல் மாதம் மதுரையை சேர்ந்த அப்துல்லா என்பவர் ‘இந்தியாவில் அல்லாவின் ஆட்சி என முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவரின் பதிவுகள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிராகவும் மத மோதல்களை உண்டாக்கும் விதமாகவும் அமைந்தது. இதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அப்துல்லா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்துல்லாவிற்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதா என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டார்கள். கடந்த ஏப்ரல் மாதம் அப்துல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தது தேசிய புலனாய்வு முகமை.
தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. ‘உபா’ எனும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அப்துல்லாவை கைது செய்து, அவரது பின்னணி குறித்து விசாரித்தது. அவரின் பயங்கரவாத அமைப்பு தொடர்பு ஆவணங்களை சேகரித்தது.தற்போது அவர் சென்னை புழல் சிறையில் உள்ளார்.
தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என கருதப்படும் அப்துல்லா கைது செய்து கிட்டத்தட்ட இரு மாதங்கள் கடந்த நிலையில் ஜூலை 24 ஆம் தேதி அப்துல்லாவின் வீட்டில் என்.ஐ.ஏ.அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். சோதனையில் அவரது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அப்துல்லா இந்து மதத்திலிருந்து இஸ்லாமியராக மாறியவர் என்பதும் அவரை மதுரை, தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த, ஒரு முஸ்லிம் குடும்பத்தினரால் மதம் மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவரை மதம் மாற்றிய அந்த இஸ்லாமிய குடும்பம் அந்த பகுதியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.அப்துல்லாவிற்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம், சின்னமனுாரைச் சேர்ந்தவர் யூசுப் அஸ்லாம், அந்த பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். மதுரையில் கைது செய்யப்பட்ட அப்துல்லாவின் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேனியில் உள்ள யூசுப் அஸ்லாம் வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர்.
5 மணி நேரத்திற்கும் மேல் யூசுப் அஸ்லாம் வீட்டை சோதனை செய்ததோடு, அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அவரது ஆதார், ரேஷன் கார்டு வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை சோதனை செய்த அதிகாரிகள் பார்த்தனர். யூசுப் அஸ்லாம் அலைபேசி, ‘பென்டிரைவ்’ உள்ளிட்டவற்றை எடுத்து சென்றனர். மேலும் யூசுப் அஸ்லாம், சின்னமனுார் காவல் நிலையத்தில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார். சோதனையில் கிடைத்த ஆவணங்களை தரும் படி அங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
யூசுப் அஸ்லாமும் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர் என தெரியவந்துள்ளது. அவர் சின்னமனுாரை சேர்ந்த திவான் என்பவர் மகளை காதல் திருமணம் செய்த யூசுப் சின்னமானுரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.