நைஜீரிய அதிபர் முகமது புஹாரி, பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக, தனது டுவிட்டரில் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் டுவிட்டர் நிறுவனம் அந்த பதிவை நீக்கியது. மேலும் 12 மணி நேரம் அதிபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ட்விட்டருக்கு, நைஜீரிய அரசு தடை விதித்தது.
இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் ட்விட்டரில்பரவப்பட்டது இதனை விசாரிக்கும் பிடி கேட்ட மத்திய அரசிற்கு சரியான முறையில் பதிலளிக்கவில்லை. ட்விட்டர் நிறுவனம் இதனால் மத்திய அரசுக்கும், அந்நிறுவனத்துக்கும் இடையே பெரும் பிரச்சினை உருவானது.
ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசு வகுத்துள்ள சமூக வலைதள கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்து வந்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு இந்தியாவின் சட்டத்திற்கு உட்பட்டு ட்விட்டர் செயல்படவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தது. உடனே பணிந்தது ட்விட்டர் நிறுவனம்.
இந்த சமயத்தில் இதற்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கூ செயலி அறிமுகமானது. ட்விட்டருக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பம்சங்கள்இடம் பெற்றது .
இந்நிலையில், நைஜீரிய அரசு ட்விட்டர் சமூகவலைதளத்துக்கு தடை விதித்த மறுநாளேஇந்தியாவின் , ‘கூ’ செயலியின் பயன்பாடு, நைஜீரியாவில் மக்களிடையே அதிகரிக்க துவங்கியது. மேலும் கூ செயலியில் அந்த நைஜீரிய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட கூ செயலிக்கு அனுமதி வழங்கியுள்ளது.நைஜீரிய அரசின் இந்த முடிவை கூ செயலி உருவாக்கிய நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி அபரமேயா ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். கடந்த வாரத்தில் கூ செயலிதளம் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
மேற்குஆப்பிரிக்க நாட்டில் புழக்கத்தில் உள்ள பிற மொழிகளிலும் தகவல்களை பகிர்ந்து கொள்ள வசதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் ஹவுசா, இக்போ, யோர்பா உள்ளிட்ட 500 மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மொழிகளில் பரிவர்த்தனை செய்ய வசதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்படி நைஜீரியாவின் உள்ளூர் மொழிகள் கூ செயலியில் விரைவில் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார். ட்விட்டருக்கு காலவரையற்ற தடையை நைஜீரிய அரசு பிறப்பித்த மறு நாளே கூ செயலிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது இந்திய நிறுவனத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பாகும்.